பெண்களுக்கான அதிகாரத்தினை ஊக்குவிப்பதற்காக இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் ஜெய்ப்பூரில் உள்ள காந்தி ரயில் நிலயத்தினை முழுமையாகப் பெண்கள் மட்டுமே கொண்டு இயக்கும் நிலைக்கு மாற்றியுள்ளது.
அனைவரும் பெண்கள்
ரயில் நிலையம் முழுவதும் டிக்கெட் செக்கர், ஆர்பிஎப், டிக்கெட் புக்கிங் கவுண்டர் மற்றும் பிற பணிகள் என 28 பெண் ஊழியர்களால் மட்டுமே இயங்கும் ரயில் நிலையமாகக் காந்தி நகர் ரயில் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் போக்குவரத்து
காந்தி நகர ரயில் நிலையத்தைத் தினமும் 7,000 பயணிகள் வரை பயன்படுத்துவதாகவும், தினமும் 50 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாகவும், 25 ரயில்கள் இங்கேயே நிறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.
சிறந்த பயிற்சி பெற்ற ஊழியர்கள்
இந்த ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்குச் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
முக்கியச் சேவைகள்
பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா, சானிட்டாரி நேப்கின் இயந்திரம் போன்றவையும் அளிக்கப்பட்டுள்ளது.
பெருமை படும் நேரம்
ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் அங்கேலா ஸ்டெல்லா அல்லது டிக்கெட் கலக்ட்டர் வந்தனா ஷர்மான என அனைவரின் முகம் சிரிப்புடனும் பெருமையுடனும் உள்ளது.
பொறுப்பு
இங்குப் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதாகவும் மற்றும் பணிபுரியும் போது இயல்பான இயக்க முறைமையைப் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
மத்துங்கா ரயில் நிலையம்
மும்பையில் உள்ள மத்துங்கா ரயில் நிலையமும் முழுமையாகப் பெண்களால் மட்டுமே இயக்கி வந்தாலும் அது துணை நகர வகை என்றும் காந்தி நகர் ரயில் நிலையம் தான் முதன்மை வரிசை வகை ரயில் நிலையம் என்றும் கூறுகின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications