ஒரு வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி.. சாதித்துக் காட்டிய சந்திரசேகரன்..!

150 ஆண்டுகள் வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ள டாடா குழுமத்தில், ஒரு வருடத்திற்கு முன்பு உயர்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக இதன் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதன் பின் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தமிழரான சந்திரசேகரன் அவர்களை டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டாடா குழுமத்தின் தலைவராக முதல் முறையாக ஒரு பார்சி அல்லாத ஒருவரை நியமிக்கப்பட்டு முழுமையாக ஒரு வருடம் ஆகியுள்ளது மட்டுமல்லாமல் சரிவில் இருந்த டாடா குழுமத்தை சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார் சந்திரசேகரன்.

ஒரு வருட வெற்றி

ஒரு வருட வெற்றி

கடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக டின்பிளேட் கம்பெனி ஆஃப் இந்தியா 186 சதவீத வளர்ச்சியும், டாடா குளோபல் பிரெவரேஜஸ் நிறுவனம் 86 சதவீத வளர்ச்சிடை அடைந்து அசத்தியுள்ளது.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

சந்தை மூலதன மதிப்பில் டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல், சந்திரசேகரன் பதிவியேற்க்கும் போது அதீத நஷ்டத்தால் விற்று விட வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

 கூட்டணி

கூட்டணி

ஆனால் சந்திரசேகரன் நிர்வாகத்தின் கீழ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தை ஜெர்மன் நாட்டு நிறுவனமான Thyssenkrup உடன் கூட்டணி வைத்து சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

தற்போது இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த புஷன் ஸ்டீல் நிறுவனத்தை 36,000 கோடி ரூபாய்க்கு வாங்க டாடா குழுமம் முயற்சி செய்து வருகிறது.

 

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

அதேபோல் டாடா குழுமத்தின் மற்றொரு முக்கியமான வர்த்தகப் பிரிவான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 1.46 லட்சம் கோடியில் இருந்து 1.17 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஆனால் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் இதுவும் வளர்ச்சி அடைந்து விடும் என நம்பிக்கை அதிகளவில் உருவாகியுள்ளது.

 

பங்கு வளர்ச்சி #1

பங்கு வளர்ச்சி #1

கடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தின் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் புள்ளிவிவரம்

டின்பிளேட் கோ - 185.89 சதவீத வளர்ச்சி
நீல்கோ - 100.69 சதவீத வளர்ச்சி
டாடா குளோபல் பிரெவரேஜஸ் - 85.50 சதவீத வளர்ச்சி
டைட்டன் கம்பெனி - 81.78 சதவீத வளர்ச்சி
ஓரியென்ட் ஹோட்டல்ஸ் - 80.93 சதவீத வளர்ச்சி

 

 பங்கு வளர்ச்சி #2

பங்கு வளர்ச்சி #2

டாடா மெட்டாலிங்க்ஸ் - 76.06 சதவீத வளர்ச்சி
டாடா ஸ்பாஜ் அயர்ன் - 62.03 சதவீத வளர்ச்சி
வோல்டாஸ் - 53.83 சதவீத வளர்ச்சி
டாடா ஸ்டீல் - 39.22 சதவீத வளர்ச்சி
டாடா இன்வெஸ்ட் கார்ப் - 34.69 சதவீத வளர்ச்சி

 பங்கு வளர்ச்சி #3

பங்கு வளர்ச்சி #3

டாடா எல்க்ஸி - 32.06 சதவீத வளர்ச்சி
டேயோ ரோல்ஸ் - 29.06 சதவீத வளர்ச்சி
டிரென்ட் -27.25 சதவீத வளர்ச்சி
டாடா கெமிக்கெல்ஸ் - 21.55 சதவீத வளர்ச்சி
டிசிஎஸ் - 19.51 சதவீத வளர்ச்சி

பங்கு வளர்ச்சி #4

பங்கு வளர்ச்சி #4

இந்தியன் ஹோட்டல்ஸ் - 16.57 சதவீத வளர்ச்சி
ஆட்டோமோடிவ் ஸ்டாம்ப் - 16.49 சதவீத வளர்ச்சி
டிஆர்எப் - 15.27 சதவீத வளர்ச்சி
டாடா காஃபி - 9.32 சதவீத வளர்ச்சி
டாடா பவர் கோ - 2.56 சதவீத வளர்ச்சி

 பங்கு சரிவு #1

பங்கு சரிவு #1

ரோலீஸ் இந்தியா - 4.61 சதவீத சரிவு
பானாரெஸ் ஹோட்டல்ஸ் - 4.98 சதவீத சரிவு
டாடா டெலிசர்வீசஸ் - 5.30 சதவீத சரிவு
டாடா கம்யூனிகேஷன்ஸ் - 15.80 சதவீத சரிவு
டாடா மோட்டார்ஸ் - 19.62 சதவீத சரிவு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+