இந்தியாவில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக டிஜிட்டல் சேவை வளர்ந்து வருகிறது, குறிப்பாக வங்கி சேவையில் இதன் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் இதே டிஜிட்டல் சேவையில் பல மோசடிகளும், கருப்புப் பணப் புழக்கமும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
இதன் படி ரிசர்வ் வங்கி டிஜிட்டல் வேலெட் சேவை மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
டிஜிட்டல் வேலெட் நிறுவனங்கள்
இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிஜிட்டல் வேலெட் சேவையை அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் KYC தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆயினும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே முழுமையான KYC தகவல்களைக் கொடுத்துள்ளனர்.
பிப்ரவரி
இதனால் ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் வேலெட் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் (பயன்பாட்டில் உள்ள வேலெட் மற்றும் பயன்பாட்டில் அல்லாத வெலெட்) முழுமையான KYC தகவல்களைச் சமர்பிக்க வேண்டும் எனத் திருத்தப்பட்ட விதிமுறைகளை அறிவித்திருந்தது.
இதற்குப் பிப்ரவரி மாதமே கடைசியாக உள்ளது.
சேவைக்குத் தடை..
2017ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வேலெட் சேவைகளுக்கான திருத்தப்பட்ட KYC விதிமுறைகளை அறிவித்தது.
இதன் படி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு 12 மாதத்திற்குள் முழுமையான KYC தகவல்கள் கொடுக்கவில்லை என்றால் எந்தொரு வேலெட்டாக இருந்தாலும் அதன் சேவையை முடக்கவும் செய்யலாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
வர்த்தகம் பாதிப்பு
டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 12,000 கோடி பணப் பரிமாற்றங்கள் டிஜிட்டல் வேலெட் வாயிலாக நடைபெற்றுள்ளது.
அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இத்தகைய சேவை தளத்தை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் நோக்கம்.
தளர்வு
பேமென்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, ரிசர்வ் வங்கியின் முழுமையான KYC தகவல்கள் விதிமுறையைத் தளர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருப்புப் பணம்
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் வேலெட் சேவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் நிலையில் அதனைக் கருப்புப் பணம் புழக்கம் செய்யும் தளமாக மாறிவிடக்கூடாது என்பதைத் துவக்கம் முதலே ஆர்பிஐ தெரிவித்து வருகிறது. இதுவே இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு முக்கியக் காரணம்.
முட்டுக்கட்டை
மேலும் முழுமையான KYC தகவல்களை அளிக்காத வேலெட் சேவையைத் தடை செய்வதால் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி வரும்.
தற்போதைய நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் வேலெட் சேவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications