சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் முறையினை மேலும் எளிமைப்படுத்த ஜிஎஸ்டிஆர்-3பி மூலம் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை எளிமையாகத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஜிஎஸ்டி தாக்கல் படிவத்தின் கீழ் உள்ளீட்டு வரி கடன் சமநிலை போன்றவற்றைத் தாக்கல் செய்ய முடியும்.

உள்ளீட்டு வரி கடன் மற்றும் மீத தொகை செலுத்துதல் கணக்கீடு இரண்டிலும் அதிகமாகத் தவறு செய்யப்படுவது கண்டறியப்பட்டு இந்தப் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம் ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்வது எளிதாக உள்ளதாக ஜிஎஸ்டிஎன் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது.
1) சமர்ப்பிக்கும் முன்பு வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என்று சரிபார்க்கும் தெரிவு.
2) வரி சலான் ஆட்டோ ஜெனரேட் செய்யப்படும். பயன்படுத்தப்பட வேண்டிய கிரெடிட் தொகை திருத்த முடியும்.
3) சேமித்த விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம்.
4) CGST அல்லது SGST / UGST நிரப்பப்பட்டவுடன் பிற வரிகள் தானாகவே கணக்கிடப்படும்.


Click it and Unblock the Notifications