இந்திய மறைமுக வரி விதிப்பை முழுமையாக மாற்றிச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யை மோடி தலைமையிலான அரசு அமலாக்கம் செய்தது. ஆனால் சரியான மற்றும் முழுமையான திட்டமிடல் இல்லாமல் அமலாக்கம் செய்த காரணத்தால் தொடர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட வேண்டிய E-Way பில் இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் வியாபாரிகளைக் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
E-Way பில்
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் E-Way பில்லை ஏப்ரல் 1ஆம் தேதி அறிவிக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் தேதியை முன்கூட்டிய அறிவித்தது. இதன் படி ஜனவரி 15ஆம் தேதி சோதனை ஓட்டம் துவங்கிய பிப்ரவரி 1ஆம் தேதி நடைமுறை திட்டமிடப்பட்டது.
ஆனால் சோதனையில் தோல்வியைக் கண்டதால் அமலாக்கம் செய்யப்படவில்லை.
ஏப்ரல் 1
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த முக்கியக் கூட்டத்தில் மாநிலங்கள் மத்தியில் சரக்கு வர்த்தக முறையின் Eway பில் முறையை ஏப்ரல் 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வருவாய்
ஜிஎஸ்டி வருவாய் இலக்குகளைத் தொடர்ந்து தவறவிட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களின் ஜிஎஸ்டி அளவுகளைப் பார்க்கும்போதும் வருவாய் அளவு இன்னமும் நிலை பெறாமல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
வருவாய் அளவுகள்
ஜனவரி மாதம் தரவும் இன்னும் வெளிவராத நிலையில் டிசம்பர் மாதம் வரையிலாகன ஜிஎஸ்டி வருவாய் அளவுகளில் இருக்கும் வித்தியாசம் மிகவும் அதிகமாக உள்ளது.
ஜூலை 2017: 86,703 கோடி ரூபாய்
ஆகஸ்ட் 2017: 90,669 கோடி ரூபாய்
செப்டம்பர் 2017: 92,150 கோடி ரூபாய்
அக்டோபர் 2017: 83,346 கோடி ரூபாய்
நவம்பர் 2017: 80,808 கோடி ரூபாய்
டிசம்பர் 2017: 86,703 கோடி ரூபாய்
வர்த்தகச் சந்தை
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்பு வர்த்தகச் சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரிவை சந்தித்துள்ளது.
இப்போது வருவாய் அளவிலும் நிலையற்ற சூழ்நிலை நிலவுவது மத்திய அரசுக்குக் கூடுதல் சுமையை உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications