வாலெட் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ வைத்த செக்.. KYC செய்ய காலக்கெடுவை நீட்டிப்பில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாலெட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC விவரங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ம் தேதி என்று ஆர்பிஐ அறிவித்து இருந்த நிலையில் அதற்கான கடைசித் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதே நேரம் வாடிக்கையாளர்கள் 28 பிப்ரவரிக்குள் KYC சரிபார்ப்பு செய்யவில்லை என்றாலும் வாலெட்டில் உள்ள பணத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளனர்.

முதலில் KYC விவரங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி 2017 டிசம்பர் 31-ஆக இருந்தது, பின்னர் இதுவே 2018 பிப்ரவரி 28 ஆக மாற்றப்பட்டது. தற்போது வங்கி அல்லாத வேலெட் சேவையினை 55 நிறுவனங்கள் அளித்து வருகின்றன.எனவே முக்கிய வாலெட் நிறுவனங்கள் செயலிகளில் KYC விவரங்களை எப்படிச் சேர்ப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

KYC ஆவணங்கள்

KYC ஆவணங்கள்

கீழ் காணும் ஆவணங்களை வாலெட் நிறுவனங்கள் KYC-க்காக ஏற்றுக்கொள்ளும்.

1) பாஸ்போர்ட்
2) ஓட்டுனர் உரிமம்
3) பான் கார்டு
4) வாக்காளர் அடையாள அட்டை
5) ஆதார் கார்டு

 

 பேடிஎம்

பேடிஎம்

பேடிஎம் செயலியில் KYC விவரங்களை அளித்தால் 1,00,000 லட்சம் ரூபாயும் மற்றும் KYC விவரங்களை அளிக்காதவர்களுக்கு 10,000 வரையிலும் வாலெட்டில் பணபரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பேடிஎம் செயலியில் KYC செய்ய ஒருமுறை கடவுச்சொல் மாட்டும் இல்லாமல் கைவிரல் ரேகை உள்ளிட்டவற்றையும் அளிக்க வேண்டும்.

மோபிவிக்

மோபிவிக்

மோபிவிக் செயலியும் பேடிஎம் போன்றே பணப்பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டது. KYC விவரங்கள் அளிக்கும் போது ஒருமுறை கடவுச்சொல் மட்டும் இல்லாமல் பையோமெட்ரிக் விவரங்களையும் அளிக்க வேண்டும். இதற்காக ஊழியர்களை நேரடியாக வீட்டிற்கே மோபிபிக் அனுப்பிப் பெற்றுக்கொள்ளும்.

 ப்ரீசார்ஜ்

ப்ரீசார்ஜ்

ப்ரீசார்ஜ் நிறுவனத்தில் ஆதார் ஓடிபி போன்றவை தேவையில்லை. வாக்காளர் அடையாள அட்டை, பான் அல்லது பாஏபோர்ட் விவரங்களை அளித்தால் போது. பரிவர்த்தனை வரம்பு ரூ. 10,000 ஆகும்.

அமேசான் மணி

அமேசான் மணி

ப்ரீசார்ஜ் போன்று அமேசான் மணியிலும் ஆதார் ஓடிபி போன்றவை தேவையில்லை. வாக்காளர் அடையாள அட்டை, பான் அல்லது பாஏபோர்ட் விவரங்களை அளித்தால் போது. பரிவர்த்தனை வரம்பு ரூ. 10,000 ஆகும்.

போன்பே

போன்பே

பேன்பே செயலியில் ஆதார் உள்ளிட்ட முழுமையான KYC விவரங்களை அளித்தால் 1,00,000 ரூபாய் வரையிலும், இல்லை என்றால் 10,000 ரூபாய் வரையிலும் பணப் பரிவர்த்தனையினைச் செய்யலாம்.

வீடியோ

வீடியோ

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI refuses to extend February 28 deadline to complete KYC for Paytm, Mobikwik, other wallets

RBI refuses to extend February 28 deadline to complete KYC for Paytm, Mobikwik, other wallets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X