ஒரே ஜிஎஸ்டி இப்போதைக்கு வேலைக்கு ஆகாது: அருண் ஜேட்லி
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் ஒரே வரி விகிதம் என்பது தற்போதைக்கு வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் மிக பெரிய வரி முறை மாற்றமான ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிகளில் சமீபத்தில் நடந்த மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாகவும் அதனை கலை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சூழலுக்கு ஏற்றவாறு பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் செய்து வருவதாகவும் இதனால் விரைவில் ஜிடிபி 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications