பிப்ரவை 28-ம் தேதியுடன் பேடிஎம், மோபிவிக் போன்ற வாலெட்டுகளுக்கு KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி முடிந்து விட்டது. செய்ய வில்லை என்றால் அதில் பணம் வைத்து இருந்தால் பயப்படாமல் பதாராமல் தொடர்ந்து படியுங்கள். ஆரிபிஐ KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றாலும் மொபைல் செயலி வாலேட்டுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பரிவர்த்தனை வரம்பு குறையும் மற்றும் பணத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
எப்படி மீண்டும் வாலெட்டினை ஆக்டிவேட் செய்வது?
ஆதார் KYC விவரங்களை அளித்தால் மட்டும் தான் முழுமையாக வால்லெட்டின் நன்மையினைப் பெற முடியும். அனைத்து வாலெட்டுகளுக்கும் KYC ஆவணங்கள் சமர்ப்பிக்க ஒரே வகையான வழிகள் தான் உள்ளது. உங்கள் வாலெட் செயலியைத் திறந்து அதில் KYC விவரங்களை அளிப்பதற்கான தெரிவை தேர்வு செய்து ஓடிபி விவரங்களை உள்ளிட்ட பிறகு வாலெட்டின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். பேடிஎம் வாலெட் என்றால் அருகில் உள்ள பேடிஎம் KYC மையம் அல்லது பேடிஎம் பிரதிநிதி ஒருவரை நீங்கள் இருக்கும் இடத்திற்கே வரவழைத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
வாலெட்டுகளில் KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் தற்போது உள்ள பணத்திற்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் வாலெட்டில் கூடுதலாகப் பணத்தினை ஏற்ற முடியாது. இருக்கும் பணத்தினை மட்டுமே செலவு செய்ய முடியும்.
சவாலாக உள்ளது
வாலெட் நிறுவனங்கள் KYC ஆவணங்களைப் பெற வேண்டிய முறையானது சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இந்தியாவில் மொத்தமாக 200 மில்லியன் முதல் 300 மில்லியனுக்கு அதிகமான வாலெட் பயனர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரிடம் இருந்து பையோமெட்ரிக் விவரங்கள் பெறாமல் ஆதார் ஓடிபி மூலமாக மட்டும் KYC ஆவணங்களைப் பெற வழிவகைச் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியானது பாதுகாப்பான வாலெட் சேவையினை அளிப்பதற்காகவே KYC ஆவணங்களைப் பெற உத்தரவிட்டுள்ளதகத் தெரிவித்துள்ளது. ஆனால் ஆர்பிஐ கொண்டு வந்துள்ள இந்தப் புதிய விதியால் வாலெட் நிறுவனங்கள் தங்களது பழைய வாடிக்கையாளர்களை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications