மோடி தலைமையிலான அரசு அதிகளவிலான நிதிநெருக்கடியில் இருப்பது மட்டும் அல்லாமல் உற்பத்தி மற்றும் சேவைத்துறையின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் மோடி அரசுக்குத் தனது இடைக்கால லாப பங்கை கொடுக்க முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு காலம் ஜூலை முதல் ஜூன் வரையிலானது. இந்நிலையில் டிசம்பர் 31 வரையிலாகக் காலத்திற்கு ரிசர்வ் வங்கி செய்த வர்த்தகத்திற்கான வருமானத்தின் லாப பங்கினை மத்திய அரசுக்கு இடைக்கால லாப பங்காகக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
எவ்வளவு தொகை..?
டிசம்பர் 31, 2017 வரையிலான வர்த்தகத்திற்குச் சுமார் 1.5 பில்லியன் டாலர், இன்றைய ரூபாய் மதிப்பில் 9,756 கோடி ரூபாய் அளவிலான நிதியை அளிக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றம் மார்ச் மாதத்திற்குள்ளேயே கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
கோரிக்கை
மத்திய அரசுக்குக் கொடுக்கப்படும் லாப பங்கு அளவீடுகள் சுமார் 5 வருட சரிவை அடைந்துள்ளதின் காரணமாத மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் கூடுதலான நிதியைக் கோரியது.
எதற்காக..?
இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக வர்த்தகச் சந்தையின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை மீட்டு எடுக்க அரசு கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது, அதபோல் 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற நிதிப் பற்றாக்குறை அளவையும் கூடுதல் நிதி மூலம் குறைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பதில் இல்லை..
இந்நிலையில் இதுகுறித்து உறுதியான தகவல்களை நிதியமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் டிஎஸ் மாலிக் மற்றும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் ஜோஸ் கட்டூர் ஆகியோர் எவ்விதமான பதிலும் மறுப்பும் தெரிவிக்கவில்லை.
நிதிப் பற்றாக்குறை
மோடி அரசு 2018-19ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை அளவீடு 3 சதவீதமாக முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நாட்டின் வர்த்தகச் சூழ்நிலையைக் கணித்து இதன் அளவை 3.3 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
அதிகளவிலான நிதி செலவிடு..
இந்த 3.3 சதவீதத்தை அடையவே மத்திய அரசு அதிகளவிலான நிதி செலவுகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலக்கை அடையும் விதமாகவே கூடுதல் நிதியை ரிசர்வ் வங்கியிடம் மோடி அரசு கேட்டுள்ளது. இந்த இலக்கை அடைந்தால் (மறைமுகமாக வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைந்தால்) 2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலில் மோடி அரசுக்குக் கூடுதல் வெற்றி வாய்ப்பு உருவாகும்.
ரிசர்வ் வங்கி
ஒவ்வொரு வருடமும் ரிசர்வ் வங்கி தான் செய்யும் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தில், தனது செலவுகளுக்குப் பின் மீதமுள்ள தொகையை மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி சட்டம் 1934இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications