பல்வேறு காரணங்களுக்காக ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையின் இருந்தது, இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் துவங்கினாலும் வர்த்தக முடிவில் சரிவை சந்தித்தது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை
ஆசிய சந்தையின் வர்த்தகம் மந்தமாக இருந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தை கணிசமான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற்று வந்தது. ஆனால் ஐரோப்பா சந்தையில் வர்த்தகம் சரிவை சந்தித்த காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ், நிஃப்டி
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 44.43 புள்ளிகள் சரிந்து 33,307.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 15.80 புள்ளிகள் சரிந்து 10,226.85 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று டாடா ஸ்டீல் சுமார் 4.66 சதவீதம் வரையில் சரிந்தது.
இதைதொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, ஆதானி போர்ட்ஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது. மேலும் எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
முக்கியத் துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மெட்டல் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications