ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக வெள்ளிக்கிழமை 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
எரிவாயு மானியத்தினை ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களின் அனுமதி இல்லாமல் அதார் விவரங்களைப் பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கோடி கணக்கான பனத்தினை வைத்து இருந்தது டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.
பின்னர் உடனடியாக ஏர்டெல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருந்து ஆதார் சரிபார்ப்பு சேவைக்கான அனுமதிக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுப் பின்னர் அந்தத் தடையினை நிபந்தனை பெயரில் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கான செயல்பாட்டு விதிமுறைகளுக்கு எதிராக நடந்து வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களை மோசடி செய்து பயன்படுத்திய ஒப்புக்கொண்டதால் ஏர்டெல் நிறுவனம் மீது 50 மில்லியன் ரூபாய் அபராதம் விதிப்பதாக 2018 மார்ச் 7ம் தேதி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications