பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் 100, 200 கோடி இருக்கும் என்று கணக்கு போட வேண்டாம். இவரிடம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளதாம். யார் இவர்..?
சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நடிகையான ஜெயா பச்சன் தனது சொத்து மதிப்பைத் தாக்கல் செய்துள்ளார்.
2014இல்..
பிஜேபி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரவிந்தர் கிஷோர் சின்ஹா 2014இல் தனது சொத்து மதிப்பாக 800 கோடி ரூபாயை அறிவித்து நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் ஜெயா பச்சன் தற்போது 1,000 கோடி ரூபாய் மதிப்பில் தனது சொத்து மதிப்பை அறிவித்துள்ளார். இவரின் முழுச் சொத்து விபரம்.
அசையா சொத்துக்கள்
2012ஆம் ஆண்டு ஜெயா பச்சன் தனது சொத்து மதிப்புகளைத் தாக்கல் செய்யும் போது வெறும் 493 கோடி ரூபாய் என அறிவித்தார்.
ஆனால் தற்போது ஜெயா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரின் அசையா சொத்துக்களின் மதிப்பு 460 கோடி ரூபாயாக உள்ளது, 2012இல் இதன் மதிப்பு 152 கோடி ரூபாய்.
அசையும் சொத்துக்கள்
2012ஆம் ஆண்டுச் சொத்து மதிப்புத் தாக்கலில் வெறும் 343 கோடி ரூபாயாக இருந்த அசையும் சொத்துக்களின் மதிப்புத் தற்போது 540 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் நகைகள்
ஜெயா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரிடம் இருக்கும் தங்கம் மற்றும் நகைகளின் மதிப்பு 62 கோடி ரூபாய் என் சொத்து மதிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமிதாப் பச்சன் 36 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிற்குத் தங்கம் மற்றும் நகைகளை வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்கள்
இந்த ஜோடி சுமார் 12 கார்களை வைத்துள்ளது, இதன் இன்றைய மதிப்பு 13 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ரோல்ஸ் ராய்ஸ், 3 பென்ஸ் கார்கள், போர்ஷே, ரேஞ்ச் ரோவர் ஆகியவை அடக்கம். அமிதாப் டாடா நேனோ மற்றும் டிராக்டர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்சு மற்றும் பேனா
அமிதாப் அவர்களிடம் சுமார் 3.4 கோடி ரூபாய் மதிப்பிலான வாட்சுகளும், ஜெயா பச்சனிடம் 51 லட்சம் மதிப்பிலான வாட்சுகளும் வைத்துள்ளார்.
மேலும் அமிதாபிடம் 9 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்பில் பேனாக்களை வைத்துள்ளனர்.
சொத்துக்கள்
பச்சன் ஜோடிக்குப் பிரான்சில் 3,175 சதுமீட்டர் அளவில் ஒரு சொத்தும், இந்தியாவில் நொய்டா, போப்பால், புனே, அகமதாபாத் மற்றும் காந்திநகர் பகுதியில் சொத்துக்கள் உள்ளது.
விவசாய நிலம்
அதேபோல் ஜெயா பச்சன் 1.22 ஹெக்டர் அளவில் லக்னோ கோகோரி பகுதியில் 2.2 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் வைத்துள்ளார்.
அதேபோல் அமிதாப் 5.7 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஏக்கர் நிலம் பாராபாங்கி மாவட்டத்தில் விவசாய நிலம் வைத்துள்ளார்.
மொத்த சொத்து மதிப்பு
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து மதிப்பு அறிக்கையின் படி ஜெயா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய் அளவைத் தாண்டுகிறது.
பிற தலைவர்கள்
ராஜ்ய சபா தேர்தலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது விண்ணப்பத்தையும், சொத்து விபரங்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். இன்றைய தேதி வரையில் ஜெயா பச்சன் தான் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications