வங்கித்துறை பங்குகள் மீண்டதால் சென்செக்ஸ் சரிவில் இருந்து தப்பித்தது..!
புதன்கிழமை வர்த்தகம் காலை மந்தமான இருந்த நிலையில், மதிய வர்த்தகத்தில் வங்கிப்பங்குகள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்த காரணத்தினால் சரிவில் இருந்த சென்செக்ஸ் குறியீடு மீண்டது.
இன்றைய வர்த்தக மீண்டதற்கு முக்கியக் காரணம் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை முதலீட்டாளர்கள் என்றால் மிகையாகாது.

மேலும் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 21.04 புள்ளிகள் சரிந்து மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பித்தது. மேலும் நிஃப்டி குறியீடு 15.95 புள்ளிகள் வரையில் சரிந்து 10,410.90 புள்ளிகளை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று ஹீரோமோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications