ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மறுத்த காரணத்தால் மோசடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி மற்றும் YSR காங்கிரஸ் கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் அதிமுகவை தவிர பிற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதே சமயம் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அதிமுக எம்பிக்களும் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள அரசியல் பிரச்சனைகளின் வாயிலாக இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது.
பங்கு விற்பனை
இந்தியாவில் உருவாகியுள்ல அரசியல் பிரச்சனைகளின் காரணமாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் காரணமாக அன்னிய முதலீட்டு அளவும் அதிகளவில் குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பம் முதலே மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது.
ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் உயர்வும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 560 புள்ளிகள் வரையில் சரிந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 509.54 புள்ளிகள் சரிந்து 33,176.00 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 165 புள்ளிகள் சரிந்து 10,195.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
சியோமி


Click it and Unblock the Notifications