ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க மீண்டு காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்காது என்று நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதற்கு முன்பு பேக் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளின் மீதும் உள்ள விலைகளை ஸ்டிக்கர் ஒட்டி மாற்றி விற்க மத்திய அரசு முதலில் 2017 அக்டோபர் 31-ம் தேதி வரை அனுமதி அளித்தது.
வணிகர்கள்
வணிகர்கள் அதிகளவில் ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்கள் விற்றுத் தீரவில்லை என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொருட்களை விற்கக் காலக்கெடு நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டதன் பேரில் மத்திய அரசு 2017 டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் பின்னர் மீண்டும் 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பினை அளித்துள்ளனர்.
காலக்கெடு நீட்டிப்பு இல்லை
தற்போது இன்னும் 14 நாட்களில் 2018 மார்ச் 31 காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டு நீட்டிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலை ஸ்டிக்கர்
நவம்பர் மாதம் 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் மிதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றிய அரசு மாற்றி அமைத்த போது கூடுதல் ஸ்டிக்கர் ஒட்டி புதிய விலை பட்டியலை மாற்றவும் நுகர்வோர் விவகார துறை அனுமதி அளித்து இருந்தது.
பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்..?
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications