இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ள நிலையில் 11 சதவீத மக்கள் தான் பிஸ்னஸ் செய்யத் திட்டமிடுகிறார்கள் என்றும் அதில் வெற்றிகரமாக 5 சதவீதத்தினர் மட்டும் தான் இறங்குகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஆய்வறிக்கையானது 18 முதல் 64 வயது வரை நிரம்பியுள்ள 3,400 வணிகர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பீடு
சர்வதேச அளவில் 5 சதவீதம் இந்திய இளைஞர்கள் பிஸ்னஸ் துவங்குவது என்பது மிகக் குறைவான ஒரு அளவாகும். அதே நேரம் வணிகத்தில் தோல்வி அடைந்து வெளியேறுவது 26.4 சதவீதமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
புதிய தொழில் முனைவோர்
மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதத்தினர் மட்டும் தான் புதிய தொழில் முனைவோர், இவர்கள் அந்த நிறுவனத்தினைச் சொந்தமாக நிர்வகிக்கிறார்கள் அல்லது இணை நிறுவனராக உள்ளார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மீதம் உள்ள 7 சதவீத வணிகர்கள் 3.5 ஆண்டுகள் வரை நடத்தப்பட்டு வரும் நிறுவனத்தின் முதலாளி - மேலாளராக உள்ளனர்.
வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள்
புதியதாக ஒரு பிஸ்னஸ் துவங்கி 42 மாதங்களுக்கும் அதிகமாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் என்றால் இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 5 சதவீதம் மட்டுமே ஆகும். உலகளவில் இந்த விகிதமானது மிகவும் குறைவாகும்.
பிரிக்ஸ் பொருளாதார நாடுகள்
பிரிக்ஸ் பொருளாதார நாடுகளில் 17 சதவீதத்துடன் பிரேசில் தான் அதிகளவில் புதிய பிஸ்னஸ் துவங்கும் நாடு என்றும் தென் ஆப்ரிக்கா 3 சதவீதத்துடன் கடைசி இடத்திலும், சீனா 8 சதவீதத்துடன் நல்ல நிலையிலும், இந்தியா மற்றும் ரஷ்யா 5 சதவீதம் பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள்
இந்தியாவில் துவக்க நிலையில் உள்ள 44 சதவீத நிறுவனங்களில் 1 முதல் 5 ஊழியர்கள் வரை மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் பணிக்கு எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், 5 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஐந்து ஊழியர்களுக்கு மேல் பணிக்கும் எடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வணிகத்தினை விட்டு வெளியேற காரணங்கள்
இந்தியாவில் வணிகம் செய்வதை விட்டு வெளியேறுவது அதிகபட்சமாக 26.4 சதவீதமாக உள்ள நிலையில் 1.3 சதவீத அதிகாரத்துவத் தாக்கங்கள், 7 சதவீதம் நிதி சிக்கல், 6.5 சதவீதம் தனிப்பட்ட காரணங்கள், 16.9 சதவீதம் லாபம் பெற முடியாதது மற்றும் 58.4 சதவீதம் பிற காரணங்களால் வெளியேறுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
விவசாயம்
விவசாயத் துறையில் சென்ற ஆண்டு இருந்த 42 சதவீதத்தினை விட அதிகளவில் புதிதாக வணிகம் துவங்குவது என்பது சரிந்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications