டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளீடு செலவுகள் உயர்வால் பயணிகள் வாகங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 60,000 ரூபாய் வரை உயர்த்த இருப்பதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2.28 லட்சம் முதல் 17.42 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில் பல்வேறு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
ஏன் இந்த விலை உயர்வு
உள்ளீடு செலவுகள் உயர்வு, சந்தை நிலை மாற்றம் மற்றும் வெளி பொருளாதாரக் காரணங்களால் கார்களின் விலையினை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாயங்க் பாரீக் தெரிவித்தார்.
வளர்ச்சி
இருப்பினும், நிறுவனம் "டியாகோ, ஹெக்ஸா, டைகர் மற்றும் நெக்ஸோன் போன்ற வலுவான தயாரிப்புகளினால் வளர்ச்சிப் பாதையைப் பராமரிப்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாகப் பாரீக் கூறினார்.
தற்போதைய விலை நிலவரம்
1 . டாடா நானோ ₹ 1.94 - 2.58 லட்சம்
2 . டாடா நானோ ஜென்எக்ஸ் ₹ 2.54 - 3.59 லட்சம்
3 . டாடா டியாகோ ₹ 3.21 - 5.85 லட்சம்
4 . டாடா வென்ச்சர் ₹ 4.84 - 5.71 லட்சம்
5 . டாடா இன்டிகா விஸ்ட்டா ₹ 5.01 - 6.19 லட்சம்
6 . டாடா டீகோர் ₹ 5.06 - 7.84 லட்சம்
7 . டாடா போல்ட் ₹ 5.10 - 8.17 லட்சம்
8 . டாடா இன்டிகா வி2 ₹ 5.34 - 5.76 லட்சம்
9 . டாடா ஸெஸ்ட் ₹ 5.67 - 9.66 லட்சம்
10 . டாடா மான்ஸா கிளப் கிளாஸ் ₹ 5.97 - 8.58 லட்சம்
11 . டாடா நெக்ஸான் ₹ 6.42 - 10.60 லட்சம்
ஆடி
சென்ற வாரம் இதே போன்று ஜெர்மன் ஆடன்பர கார் நிறுவனமான ஆடி இறக்குமதி வரி உயர்வால் தங்களது கார்களின் விலையினை 1 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை ஏப்ரல் 1 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. மேலும் படிக்க
டட்சன்
நிசான் நிறுவனம் தங்களது ஏப்ரல் மாதம் முதல் டட்சன் தயாரிப்பு மாடல்களின் விலையில் 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டட்சன் கார்கள்
2.49 லட்சம் முதல் 5.12 லட்சம் ரூபாய் வரையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நிசான்
நிசான் நிறுவனம் தற்போது மைக்ரா, சன்னி மற்றும் டெர்ரோனோ ஆகிய கார்களை 4.64 லட்சம் ரூபாய் முதல் 14.46 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்து வரும் நிலையில் ஏப்ரல் 1 முதல் கார்கள் விலை உயரும் என்று நிசான் மோட்டாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜெரோம் சைகோட் தெரிவித்துள்ளார்.
மோடி
ஜியோ
ரயில்வே அதிரடி!
டீசல் உங்கள் வீட்டிற்கே டெலிவரி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications