ஏர்இந்தியா ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

கடனில் மூழ்கித் தவிக்கும் ஏர் இந்தியாவைக் காப்பாற்றவும், இந்நிறுவனத்திற்கான புதிய வர்த்தகத்தை உருவாக்கவும் மத்திய அரசு இதனைத் தனியார்மயமாக்க ஆய்வு செய்து வருகிறது. பல முறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் எதிர்ப்புகள் அதிகரித்த காரணத்தால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடன் சுமையை மேலும் சுமக்க முடியாது என்ற காரணத்தால் தற்போது தனியார்மயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திடீர் முடிவு

இத்தகைய மோசமான சூழ்நிலையில் இருக்கும் ஏர் இந்தியா, சுமார் 100 பைலெட்களுக்கு மாதம் 12 லட்சம் ரூபாய் வரையிலான சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது.

பதவி உயர்வுடன் சம்பள உயர்வு

குறுகிய மற்றும் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட விமானத்தை இயக்கும் 100 துணை பொது மேலாளர் பதவியில் இருக்கும் ஊழியர்களுக்கு நிர்வாக அதிகாரிகளாகப் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கல்

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்க பணிகளைத் துவங்கியுள்ள இந்த நிலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டது ஏர் இந்தியாவில் பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஊழியர்கள் நிலை

கடந்த 8-10 வருடமாக இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்விதமான சம்பள உயர்வும் அளிக்கப்படவில்லை, இதன் காரணமாகவே தற்போது இக்கட்டான சூழ்நிலையிலும் பதவி மற்றும் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிர்வாகம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவிஐபி விமானம்

மத்திய அரசு விவிஐபிக்கள் பயன்படுத்துவதற்காக ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இயக்க 2 விமானங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு அறிக்கவிக்கப்பட்ட சில நாடுகளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India giving pay hike Rs 12 lakh to 100 pilots

Air India giving pay hike Rs 12 lakh to 100 pilots
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns