ஹைதராபாத்: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு மோசடி நடைபெற்றதில் அடுத்து யூனியன் பாங்க் ஆப் இந்தியாவ் சிக்கியுள்ளது. ஹைதராபாத்தினைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் 303.84 கோடி ரூபாயினை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே இந்த மோசடி குறித்து முழுமையான விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
யூனியன் வங்கி
மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூனியன் வங்கி டோடெம் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் என்ற நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மோசடி
யூனியன் வங்கி உட்பட 8 வங்கிகளில் இருந்த இந்த நிறுவனம் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் அதன் மதிப்பு 1,394.43 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ
யூனியன் வங்கி சிபிஐ-க்கு அளித்த புகாரின் பேரில் டோடெம் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தின் நிறுவனர்களான டோடெம்பதி சலாலித் மற்றும் அவரது மனைவி டோடெம்பதி கவிதா இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
ஹைதராபாத்
ஹைதராபாத்தில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் தொழில்துறை நிதி கிளையானது டோடெம் நிறுவனம் மீது புகாரினை அளித்துள்ளது.
டோடெம் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர்
டோடெம் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனமானது சாலை கட்டமைப்பு, கட்டம் கட்டுதல் மற்றும் நீர் பாசன சேவைகள் போன்ற திட்டங்கள் செய்து வருகிறது.
மோசடிகள்
பஞ்சாப் வங்கியில் நீரவ் மோடி மோசடி, ரோட்டகேக் நிறுவன மோசடி, சிம்போஹோலி சுகர்ஸ் நிறுவன மோசடி, கனிஷ்க் ஜூவல்லர்ஸ் மோசடியினை அடுத்துத் தற்போது டோடெம் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனம் மோசடியும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் வெளிவந்துள்ள மோசடிகளினால் மட்டும் இந்திய வங்கி அமைப்பானது 2.5 பில்லியன் டாலர் வரை ஏமார்ந்துள்ளது.
பங்குகள்
யூனியன் வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்துச் செய்திகள் வெளியானதை அடுத்து இன்று காலை முதல் பங்குகள் சரிந்து உள்ளது. பிற்பகல் 12:10 மணி நிலவரத்தின் படி 8.25 புள்ளிகள் என 8.71 சதவீதம் சரிந்து 86.45 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications