சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை கொண்டு வந்தால் வரி வசூல் வரலாறு காணாத வகையில் நிச்சயம் அதிகரிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. இதன் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி வரி அமைப்பை அமலாக்கம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது.
பிப்ரவரி வரி வசூல்
பிப்ரவரி மாத வர்த்தகத்திற்கான வரி வசூல் மார்ச் மாதத்தில் செய்யப்படும் நிலையில், மார்ச் 26 வரை செய்யப்பட்ட வரி வசூல் தொகை 85,174 கோடி ரூபாய் மட்டுமே.
சரிவு
ஜனவரி மாதத்திற்குப் பிப்ரவரி 25 வரை செய்யப்பட்ட வரி வசூல் தொகை 86,318 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய மாதத்தில் 86,703 கோடி ரூபாயாக இருந்தது.
இப்படிக் கடந்த 3 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
வரி விபரம்
ஜிஎஸ்டி வரியின் கீழ்
மத்திய ஜிஎஸ்டி வரியாக 14,945 கோடி ரூபாயும்
மாநில ஜிஎஸ்டி வரியாக 20,456 கோடி ரூபாயும்
ஐஜிஎஸ்டி வரியின் கீழ் 42,456 கோடி ரூபாயும் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications