மார்ச் 29, 30 மற்றும் 31-ம் தேதி வருமான வரி அலுவலகங்கள் விடுமுறையின்றி இயங்கும்..!
2016-2017 மற்றும் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் 2016-2017 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய 2018 மார்ச் 31 கடைசித் தேதி ஆகும்.

ஆனால் மார்ச் 29 மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 புனித வெள்ளி போன்றவற்றுக்காக விடுமுறை இருந்த போதிலும் வருமான வரித் துறை இயங்கும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் மார்ச் 31-ம் தேதி சனிக்கிழமை வார விடுமுறை தினமும் வருமான வரித் துறை விடுமுறையின்றி இயங்க உள்ளது.
இந்த நடவடிக்கையானது வரி செலுத்துனர்களுக்குத் தேவையான உதவிகளை அளிப்பதற்காகவே என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications