சென்னை: டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாகக் காக்னிசென்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குகளை வருமான வரி துறை முடக்கி உள்ளது.
இதனை உறுதி செய்த காக்னெசென்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதற்கு மேலும் எந்த நடவடிக்கையும் காக்னிசென்ட் நிறுவனம் மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வருமான வரி துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மோசடி
2016-2017 நிதி ஆண்டில் காக்னிசென்ட் நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரியினைச் செலுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியானதை அடுத்து வருமான வரித் துறை இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
ஆனால் காக்னிசென்ட் நிறுவனம் இந்தப் பரிவர்த்தனைக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் கட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வழக்கு
வருமான வரித் துறை காக்னிசென்ட் நிறுவனத்தின் சில வங்கி கணைக்கினை முடக்கிய உடன், காக்னிசென்ட் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வணிகச் செயல்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லை
வருமான வரி துறையினர் எடுத்துள்ள நடவடிக்கையினால் காக்னிசென்ட் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
தகவல் அளிக்க மறுப்பு
வருமான வரி துறையினரை இது குறித்துத் தொடர்புகொண்டு முழு விவரங்களைப் பெற முடியாத நிலையில் காக்னிசென்ட் நிறுவனமும் பல முக்கியக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
ஊழியர்கள்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசென்ட் நிறுவனத்தில் அதிகபட்சமாக 2,60,000 இந்திய ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
வழிக்கு வந்தது ஆப்பிள்
பான் - ஆதார் இணைப்பு


Click it and Unblock the Notifications