இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்திற்கு அட்சயபாத்திரமாக விளங்குவது டிசிஎஸ் நிறுவனம். இதுமட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 வருடத்தில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.
டிசிஎஸ்
இந்திய மென்பொருள் சந்தையில் இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா போன்ற பல முன்னணி நிறுவனங்களை வர்த்தகத்திலும், வருவாயிலும், பின்னுக்குத் தள்ளி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்திலேயே இருந்து வருகிறது டிசிஎஸ் நிறுவனம்.
சந்தை மதிப்பீட்டிலும் டிசிஎஸ் தான் நம்பர் 1.
10 வருடம்
கடந்த 10 வருடத்தில் இந்திய மற்றும் சர்வதேச மென்பொருள் சந்தையில் பல சரிவுகள் இருந்தாலும் டிசிஎஸ் தொடர்ந்து வர்த்தகத்தை நிலைநிறுத்தி முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான லாபத்தை அளித்து வருகிறது.
ப்ளூ சிப் பங்குகள்
இதேபோல் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் ப்ளூ சிப் பங்குகளில் அதிக வளர்ச்சி அடைந்ததும் டிசிஎஸ் நிறுவனம் தான். இதன் காரணமாகவே டிசிஎஸ் நிறுவனத்தில் முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.
அசுர வளர்ச்சி
2008 மார்ச் 31இல் 405.23 ரூபாயாக இருந்த டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 603 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இன்று 2,849.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மார்ச் 2008இல் 405 ரூபாய் என்ற அளவை விடவும் அதிகமான சரிவை டிசிஎஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஈவுத்தொகை
இதோடு கடந்த 10 வருடத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 325.5 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அளித்துள்ளது.
சந்தை மூலதனம்
இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் மத்தியில் டிசிஎஸ் தான் அதிகச் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது, அனைத்து நிறுவனங்களை ஒப்பிடுகையில் டிசிஎஸ் 2வது இடத்தில் உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தின் மதிப்பு 5.45 லட்சம் கோடி ரூபாய்.
புதிய உச்சம்
2018 ஜனவரி மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் 3,259.05 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications