இந்தியாவில் பிளாக்செயின் துறையில் பணியாளர்களுக்கு அதிகத் தேவை உள்ளது. அதே சமயம் பெங்களூரு நகரம் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது என ஒரு அறிக்கை கூறுகிறது.
பெங்களூரு
சர்வதேச வேலைவாய்ப்பு தளமான இன்டீடு (Indeed) அளித்த தரவுகளின் படி, பிளாக்செயின் துறையில் வேலை தேடுபவர்களுக்குப் பெங்களூரு முன்னணி நகரமாகத் திகழ்கிறது மற்றும் இந்தியாவின் 36% பிளாக்செயின் வேலைவாய்ப்புப் பதிவுகள் அந்நகரத்திலிருந்து பெறப்படுகிறது.
டாப் நகரங்கள்
பெங்களூரை தொடர்ந்து அடுத்த இடத்தில் மும்பை, ஹைதராபாத், பூனே சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்று, பிளாக்செயின் துறை வேலைவாய்ப்புக்கான டாப் 5 நகரங்களாக உள்ளன.
தென் மாநிலங்கள்
மேலும் அந்த அறிக்கைப்படி, புதுடெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான குருகிராம், நொய்டா, மொகாலி போன்ற பகுதிகளிலிருந்தும் இந்தத் துறைக்கான வேலைவாய்ப்புப் பதிவுகள் வந்துள்ளன. ஆனாலும், தென் பகுதிகளை ஒப்பிடும் போது அதிக எண்ணிக்கையில் இல்லை.
7.7 பில்லியன் டாலர்
தொழில்நுட்ப மையங்களான பெங்களூரும், ஹைதராபாத்தும் இதில் முன்னிலையில் இருக்கும் போது, தலைநகர் பகுதியும் பிளாக்செயின் துறையில் ஆர்வமாக உள்ளது. 2022ல் பிளாக்செயின் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் உலகச் சந்தை மதிப்பு 7.7 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், கண்டிப்பாக எதிர்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் இத்துறையில் உருவாகும் எனவும் கூறுகிறார் இன்டீடு இந்தியாவின் மேலாண் இயக்குநர் சசிகுமார்.
அரசு முயற்சி
அந்த அறிக்கையின் படி, பிளாக்செயின் தொழில்நுட்ப செயலிகளைப் புரிந்து தெரிந்துகொள்ள அரசு முயல்வதன் மூலம், இந்தியாவில் இத்துறைக்கு நல்ல வளர்ச்சியும் மேம்பாடும் இருக்கும் என்கிறது.
புதிய வேலைவாய்ப்பு
நிதி ஆயோக்கின் பிளாக்செயின்-இந்தியாசெயின் என்ற செயல்திட்டத்தின் மூலம் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலும் என்கிறது அந்த அறிக்கை.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டிய நிலையிலும், அதன் பரந்துவிரிந்த செயல்பாடு, அதன் மீதான ஆர்வத்தை அப்படியே வைத்திருக்கும் என்கிறார் , சசிகுமார்.
2017க்குப் பின்
இன்டீடு நிறுவனத்தின் தகவல்படி, பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்ஸி பற்றிய வேலைவாய்ப்பு பதிவுகளின் எண்ணிக்கை, 2017க்கு பிறகு பெருமளவில் உயர்ந்துவிட்டது. பிளாக்செயின் டெவலப்பர், பிளாக்செயின் சிஸ்டம் ஆர்கிடெக்ட், பிளாக்செயின் சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற பணிகளுக்குக் குறிப்பிடத்தகுந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications