கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக மார்ச் காலாண்டில் மட்டும் வராக்கடன் அளவு சுமார் 8,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த வங்கி துறையும் அதிர்ச்சியுள்ளது. மேலும் இதன் பாதிப்புத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரியதாக வெடிக்கும் எனவும் தெரிகிறது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் மொத்த வராக்கடன் அளவு டிசம்பர் மாத முடிவில் 8,40,958 கோடி ரூபாயாகவும், இதில் சேவை மற்றும் விவசாயத் துறைக்கு அதிகளவிலான கடன் வழங்கியுள்ளதாக வங்கித்துறை தெரிவித்துள்ளது.

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹூல் சோக்ஸி மற்றும் நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடியின் மாமா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களை வைத்து சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளது, இந்த 13,000 கோடி ரூபாய் மோசடியும் மும்பையில் இருக்கும் ஓரே கிளையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்குப் பெயிலில் வர முடியாத கைது வாரண்டை சிபிஐ நீதிமன்றம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications