இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ம் காலாண்டு அறிக்கையில் லாபம் 73 சதவீதம் வரை சரிந்து 83 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனமானது வருவாயில் 3.4 சதவீதம் இழந்து மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 19,634 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சராசரி வருவாய்
சராசரியாக ஒரு வாடிக்கையாளர்களிடம் இருந்து டிசம்பர் மாதம் முடிவடைந்த 3-ம் காலாண்டில் ஏர்டெல் 123 வரை வருவாயாகப் பெற்று வந்த நிலையில் அது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் 116 ரூபாயாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆப்ரிக்க வருவாய்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ஆப்ரிக்க வருவாய் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து 699 கோடி ரூபாய் ஆக உள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து 15 வருடங்கள் இல்லாத அளவிற்கு 652 கோடி ரூபாயினை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜியோ
முகேஷ் அம்பானி தலைமையின் ஜியோ இந்திய டெலிகாம் துறையில் பிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் பிற நிறுவனங்களை விட அதிக வாடிக்கையாளர்களையும் பெற்று வருகிறது.
பங்குகள்
ஆனாலும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்து வரும் நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2:55 மணியளவில் 12.65 புள்ளிகள் என 3.11 சதவீதம் உயர்ந்து 418.75 புள்ளியாகப் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications