இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ 2017-2018 நிதி ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்டது. அதில் நிகர லாபம் 1,800 கோடி ரூபாய் என்றும், இது 6.7 சதவீத சரிவு என்றும் அறிவித்துள்ளது.
லாபம் சரிய யார் காரணம்
விப்ரோ நிறுவனத்தின் இந்த நிகர லாப சரிவுக்குத் தங்களது இரண்டு முக்கிய வாடிக்கையாள் திவால் ஆனதே காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
வருவாய்
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலமாக வருவாய் 0.7 சதவீதம் உயர்ந்து 13,669 கோடியாக உள்ளது. ஐடி சேவை துறையில் இருந்து 13,412 கோடி ரூபாய் வருவாயினை விப்ரோ பெற்றுள்ளது, இது டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டு பெற்ற 13,235 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது 1.3 சதவீத உயர்வு ஆகும்.
வருவாய் மார்ஜின்
ஐடி சேவைகளில் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் மார்ஜின் 14.4 சதவீதம் ஆகும். இது 0.4 சதவீத சரிவு ஆகும். ஐடி சேவைகளில் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் 4-ம் காலாண்டில் 1,932 கோடி ரூபாயாக வந்த நிலையில் டிசம்பர் மாத காலாண்டில் 1,959 கோடியாக இருந்துள்ளது.
ஏர்செல்
விப்ரோ நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக ஏர்செல் நிறுவனம் இருந்தது, அது தற்போது தேசிய நிறுவனங்களின் சட்ட தீர்ப்பாயத்தில் அதிகக் கடன் உள்ள காரணத்தால் திவாலானதாக அறிவிக்கக் கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நாஸ்காம்
மென்பொருள் மாற்றும் சேவைகள் நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் ஐடி துறை நடப்பு ஆண்டில் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியினை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பங்குகள்
விப்ரோ நிறுவனப் பங்குகள் இன்று காலை முதல் பிளாட்டாகவே இருந்து 0.15 புள்ளிகள் என 0.05 சதவீத உயர்வுடன் 287.20 புள்ளிகளாக வர்த்தகத்தினை முடித்துக்கொண்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications