இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் வெற்றிகரமாக வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி உணவு டெலிவிரி பிரிவில் சிறந்து விளங்குகிறது.
இந்நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் ஆகிய நாட்டின் முன்னணி நகரங்களில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தனது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது.
விரிவாக்கம்
இதுநாள் வரையில் உணவு டெலிவரியில் மட்டுமே இருந்த ஸ்விக்கி தற்போது மருத்துப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களையும் டெலிவரி செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
ஆலோசனை
இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பல பிரிவை ஆலோடனை செய்யப்பட்ட பின்பு மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் பணியை முதலீடு துவங்கி, அதன் பின் மளிகை பொருட்களுக்கு விரிவாக்கம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
30,000 ஊழியர்கள்
இதன் மூலம் ஸ்விக்கி நிறுவனத்தில் இருக்கும் 30,000 ஊழியர்களைத் தங்களது வேலை நேரத்தில் முழுமையாகப் பயன்படுத்த முடியும் எனவும், முக்கியமான மதிம் 2 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்த முடியும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
டேஷ்
இப்புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு டேஷ் எனப் பெயர் வைக்க ஸ்விக்கி முடிவு செய்துள்ளது.
1 பில்லியன் டாலர்
நேப்ஸ்டர் நிறுவன முதலீட்டில் இயங்கும் ஸ்விக்கி தற்போது 1 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைத் தாண்டியுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் டிஎஸ்டி குளோபல் மற்றும் கோட்யூ மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் வாயிலாக 200 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்தது.


Click it and Unblock the Notifications