2017-18-ம் நிதியாண்டின் ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 2017-18 ஆம் நிதியாண்டில், 2017 ஆகஸ்ட் முதல், 2018 மார்ச் முடிய ஜிஎஸ்டி வரிவிதிப்பின் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.7.19 லட்சம் கோடியாகும்.

மத்திய, மாநில ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு?
 

மத்திய, மாநில ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு?

இதில் ரூ.1.19 லட்சம் கோடி மத்திய ஜிஎஸ்டி-யாகவும், ரூ.1.72 லட்சம் கோடி மாநில ஜிஎஸ்டி-யாகவும், ரூ.3.66 லட்சம் கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாகவும் வசூலிக்கப்பட்டது. (இறக்குமதி மீது வசூலான ரூ.1.73 லட்சம் கோடி இதில் அடங்கும்). ரூ.62,021 கோடி செஸ் மூலம் கிடைத்தது. (இறக்குமதி மீது ரூ.5,702 கோடி உட்பட). இந்த எட்டு மாதங்களில் சராசரி மாதாந்திர வசூல் ரூ.89,885 கோடியாகும்.

முழு அட்டவணை

முழு அட்டவணை

Return PeriodRequired to fileTill due

date Cumulative Returns % Returns % July '17 6647581 3834877 57.69% 6388549 96.10% Aug '17 7370102 2725183 36.98% 6851732 92.97% Sep '17 7823806 3934256 50.29% 7109143 90.87% Oct '17 7721075 4368711 56.58% 6777440 87.78% Nov '17 7957204 4913065 61.74% 6765603 85.02% Dec '17 8122425 5426278 66.81% 6747887 83.08% Jan '18 8322611 5394018 64.81% 6694387 80.44% Feb '18 8527127 5451004 63.93% 6562362 76.96% Mar '18 8715163 5458728 62.63% 5630683 64.61%

ஜிஎஸ்டி வசூல் எப்படிச் செய்யப்படுகிறது?
 

ஜிஎஸ்டி வசூல் எப்படிச் செய்யப்படுகிறது?

உள்நாட்டு விநியோகம் மீதான ஒரு மாதத்தின் விவரங்களைத் தாக்கல் செய்வதன் மூலமான வரி வசூல், அடுத்த மாதத்தில்தான் நிறைவடையும். ஆனால், இறக்குமதி மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி மற்றும் செஸ் அதே மாதத்தில் வசூலாகிவிடும்.

அதனால் நடப்பு ஆண்டில் உள்நாட்டு விநியோகத்தின் மீதான வரி வசூல் 2017ஆகஸ்ட் முதல், 2018 மார்ச் முடிய எட்டு மாதங்களுக்குச் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி மீதான செஸ் ஆகியவை 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 மார்ச் முடிய ஒன்பது மாதங்களுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. 2017 ஜூலை வசூல் உட்பட, 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல், தற்காலிகமாக ரூ.7.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கான வருவாய்

மாநிலங்களுக்கான வருவாய்

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வசூல் இந்தக் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உட்பட ரூ.2.91 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் எட்டு மாத காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு ரூ.41,147 கோடியாகும். இது 2015-16-ஆம் ஆண்டின் வரிவசூலின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் 14 சதவீத அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாய் இடைவெளி கடந்த எட்டு மாதங்களில் குறைந்துவந்துள்ளது. கடந்த ஆண்டின் அனைத்து மாநிலங்களின் சராசரி வருவாய் இடைவெளி 17 சதவீத அளவில் இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST REVENUE COLLECTIONS FOR THE FINANCIAL YEAR 2017-18

GST REVENUE COLLECTIONS FOR THE FINANCIAL YEAR 2017-18
Story first published: Friday, April 27, 2018, 18:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more