256 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..!
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியாகும் நிலையில் இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு குவிந்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்திற்கு ஆசிய சந்தையில் நிலையான வர்த்தக உயர்வு பெரிய அளவில் சாதகமாக இருந்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 256.10 புள்ளிகள் உயர்ந்து, 34,969.70 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 74.50 புள்ளிகள் உயர்ந்து 10,692.30 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகத்துடன் இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications