இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு கடன் நிறுவனமான எச்டிஎப்சி மார்ச் மாத காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது. முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் முடிவுகளைப் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் எச்டிஎப்சி மார்ச் காலாண்டில் 39.2 சதவீதம் அதிக லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
லாபம்
2017ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் 2,044.22 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற எச்டிஎப்சி 2018 மார்ச் காலாண்டில் 2,846.22 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
வருவாய்
அதேபோல் கடந்த வருடத்தின் மார்ச் காலாண்டில் 8,514.51 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில் நடப்பாண்டில் 13 சதவீதம் அதிகரித்து 9,633.89 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
ஈவுத்தொகை
அதேபோல் எச்டிஎப்சி நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் ஒரு பங்கிற்கு 16.50 ரூபாய் அளித்துள்ளது.
வட்டி வருமானம்
இக்காலாண்டில் எச்டிஎப்சி வங்கியின் மொத்த வட்டி வருமானம் 12.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து 3,617 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
பங்கு நிலை
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி நிறுவனப் பங்குகள் 1.44 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,884.65 ரூபாய் விலை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications