நிலையான வர்த்தகத்தில் 190 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ்..!
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை சிறப்பான முதலீட்டை பெற்று நிலையான வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 200 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 190.66 புள்ளிகள் வரையில் உயர்ந்து 35,160.36 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 47.05 புள்ளிகள் வரையில் உயர்ந்து 10,739.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் யெஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், கோட்டாக் வங்கி, எல் அண்ட் டி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications