சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக ஏப்ரல் மாதம் 1,03,458 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
2018 ஏப்ரல் மாதம் மொத்தமாக 1,03,458 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய ஜிஎஸ்டி ஆக 18,652 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி ஆக 25,7047 கோடி ரூபாயும், ஐஜிஎஸ்டி ஆக 50,548 கோடி ரூபாயும், செஸ் ஆக 8,554 கோடி ரூபாயும் வரி வருவாயினைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைல்கல்
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதனை மிகப் பெரிய மைல்கல் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் லட்சம் கோடியை கடந்துள்ளது பொருளாதாரச் செயல்பாடுகள் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது என்றும் அருண் ஜேட்லி டிவிட் செய்துள்ளார்.
வருவாய்
செட்டில்மெண்ட் செய்த பிறகு ஏப்ரல் மாதம் பெற்றுள்ள வருவாயானது மத்திய ஜிஎஸ்டி-ல் 32,493 கோடி, மாநில ஜிஎஸ்டி 40,257 கோடி. ஏப்ரல் மாதம் 69.5 சதவீத நபர்கள் வரி செலுத்துபவர்களாக இருந்துள்ளனர்.
வரி தாக்கல் எண்ணிக்கை
மார்ச் மாதம் ஜிஎஸ்டிஆர் 3பி-ஐ 60.47 லட்சம் நபர்கள் தாக்கல் செய்த நிலையில் ஏப்ரல் மாதம் 87.12 லட்சம் நபர்கள் தாக்கல் செய்துள்ளனர் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல பொருள் விற்பனையாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய காலாண்டு கணக்கிற்கான கெடு ஏப்ரல் மாதமாகும். 19.31 லட்சம் விற்பனையாளர்களின் ஜிஎஸ்டிஆர் 4 படிவம் மூலம் காலாண்டுக்கான கணக்குகளை 11.47 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இது 59.40 சதவீதமாகும். இதன் மூலம் பெறப்பட்ட வரி ரூ.579 கோடி ஆகும். இது ஒட்டுமொத்த ஜிஎஸ்டிவரி வசூல் தொகையான 1.03 லட்சம் கோடியில் அடங்கும்.
பொருளாதாரத்தில் மேம்பாடு
ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள உயர்வு பொருளாதாரத்தில் மேம்பாட்டைப் பிரதிபலிக்கும். இருப்பினும் நிதி ஆண்டின் கடைசி மாதத்தில் வழக்கமாக மக்கள் தங்களது நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் அதனால் இந்த மாத வரி வசூலை வருங்காலத்திற்கான போக்காகக் கருதமுடியாது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications