திவால் சட்டம் 2016 (விதி) என்பது நவீன பொருளாதாரச் சட்டம். இந்தச் சட்டத்தின் பிரிவு 240 இந்திய திவால் வாரியம் வரன்முறைகளை அமைக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. இந்த வரன்முறைகள் (அ) சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், (ஆ) இவை விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், (இ) அரசிதழில் இதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் மற்றும் (ஈ) இந்த விதிகள் இயன்ற வரை விரைவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் 30 நாட்களுக்கு வைக்கப்பட வேண்டும்.

சட்டத்தின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரன்முறைகள் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் வரன்முறை செய்யப்பட்டவர்கள் உட்படப் பொதுமக்களிடமிருந்து கருத்துகளை இந்திய திவால் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 2018 ஏப்ரல் 30 முதல் 2018 டிசம்பர் 31 வரை பெறப்படும் கருத்துகள் ஒன்றாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடைமுறைகளைத் தொடர்ந்து வரன்முறைகள் தேவையான அளவுக்குத் திருத்தம் செய்யப்படும். திருத்தம் செய்யப்பட்ட வரன்முறைகள் 2019 மார்ச் 31ம் தேதிக்குள் அறிவிக்கையாக வெளியிட இந்திய திவால் வாரியம் விரும்புகிறது. மேலும் இவற்றை 2019 ஏப்ரல் 1ம் தேதி அமலுக்குக் கொண்டு வரவும் விரும்புகிறது. இதே போன்ற நடவடிக்கை முந்தைய ஆண்டு மேற்கொள்ளப்பட்டு, அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு வரன்முறைகள் திருத்தம் செய்யப்பட்டு 2018 ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வரைவு வரன்முறைகள் அறிவிக்கையாக வெளியிடப்படும் முன்பு அது குறித்துப் பொதுமக்களின் கருத்தை அறியும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கருத்துகளை அளிக்கவும் நடைமுறைகளைப் பின்பற்றவும் pib.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.


Click it and Unblock the Notifications