இனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..!

ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான பிஎப்ஆர்டிஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பு மற்றும் புதிதாகப் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்றால் இடையில் வெளியேற அனுமதி அளித்துள்ளது.

இதற்கான முடிவு சென்ற வாரம் நடைபெற்ற ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் போர்டு உறுப்பினர்கள் இடையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கு அனுமதி இல்லை

இதற்கு அனுமதி இல்லை

என்பிஎஸ் திட்டத்தில் குழந்தைகள் கல்விக்காகப் பணத்தினை எடுக்க அனுமதி அளித்தாலும் தான் செய்யும் வேலைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளப் பணத்தினை இடையில் எடுக்க அனுமதி அளிப்பதில்லை.

 பிஸ்னஸ்

பிஸ்னஸ்

சொந்தமாகப் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்றால் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தில் ஒரு பகுதியை இடையில் எடுக்க முடியும்.

என்பிஎஸ் திட்டம்

என்பிஎஸ் திட்டம்

தேசிய ஓய்வுதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் போது வருமான வரிச் சட்டம் 80சி கீழ் அளிக்கப்படும் 1,50,000 ரூபாய் வரி விலக்கு வரம்பு கூடுதலாக 50,000 ரூபாய் என 2,00,000 லட்சம் வரை பெற அனுமதி அளிக்கப்படுகிறது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்

என்பிஎஸ் சந்தாதார்களின் முதலீடு பணத்தில் 50 சதவீதம் வரை பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்ததைத் தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 75 சதவீதம் வரை உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ & ஆக்டிவ்

ஆட்டோ & ஆக்டிவ்

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆட்டோ & ஆக்டிவ் என இரண்டு வகையான சேவை அளிக்கப்படுகிறது. அட்டோ கீழ் முதலீடு செய்யும் போது பணத்தினை எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வெண்டும் என்பதைப் பிஎப்ஆர்டிஏ முடிவு செய்யும்.

இதுவே ஆக்டிவ் கீழ் முதலீடு செய்யும் போது என்பிஎஸ் கணக்கு வைத்துள்ள சந்தாதாரே நிர்வகிக்கலாம்.

 

 பிஎப்ஆர்டிஏ

பிஎப்ஆர்டிஏ

தற்போது பிஎப்ஆர்டிஏ கீழ் என்பிஎஸ் மற்றும் அட்டல் பென்ஷன் யோஜனா என இரண்டு ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் 2.13 கோடி நபர்கள் 2.38 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+