ஜிஎஸ்டி கவுன்சில் சென்ற வாரம் நடைபெற்ற கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக டிஸ்கவுண்ட் அளிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளது.
இதனால் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நாம் செலுத்தும் கட்டணத்தில் 100 ரூபாய் வரை ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு பெற முடியும்.
குறைந்தபட்ச பரிவர்த்தனை
ஜிஎஸ்டி டிஸ்கவுட் சலுகையினைப் பெற குறைந்தபட்சம் 1,400 ரூபாய் வரையிலான பரிவர்த்தனையினைச் செய்யும் போது மட்டுமே 2 சதவீதம் வரை ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்க அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு
ஒருவேலை பரிவர்த்தனை அளவு 900 ரூபாய் என்றும் 1,329 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் அவை என்றும் வைத்துக்கொண்டால் அரசுக்கு வரும் வருவாயில் 9,500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவே 1,400 ரூபாய் பரிவர்த்தனைகளுக்கான டிஸ்கவுண்ட் என்றால் 14,855 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
பிஸ்னஸ் டூ கஸ்டமர்
டிஸ்கவுட் திட்டமானது 3 சதவீதம் முதல் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கும் போது அதிலும் பிஸ்னஸ் டூ கஸ்டமர் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்காத மாநிலங்கள்
இந்த டிஸ்கவுட் திட்டத்தினை ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதித்த போது மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்கள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தினால் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
எந்தப் பரிவர்த்தனைகளுக்கு எல்லாம் இந்த வரி விலக்கு?
ஜிஎஸ்டி கவுன்சில் கிரெடிட், டெபிட், மொபைல் வாலெட், மொபைல் வங்கி சேவை, யூபிஐ, இணையதள வங்கி சேவை போன்றவற்றைப் பயன்படுத்திக் கட்டணங்களைச் செலுத்தும் போது பொருட்களை வாங்கும் போதும் வரிச் சலுகையினை அளிக்க முடியும் செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications