பேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..!

உலகளவில் பலருக்குத் தாங்கள் வாங்கும் வாகனங்களின் எண்கள் பேன்சியாக இருக்க வேண்டும் என்று கோடிகள் செலவு செய்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். தற்போது இந்தியாவில் முதன் முறையாக ஜெய்ப்பூர் சேர்ந்த தொழில் அதிபர் தனது ஆடம்பர காருக்கான பேன்சி எண்ணை வாங்க 16 லட்சம் ரூபாய் செய்துள்ளது இணையதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

ரஹ்லுல் தனேஜா வைத்திருக்கும் கார்கள் எல்லாவற்றுக்கும் 0001 என்ற எண்ணை வைத்துள்ளார். 35 வயது ஆன இவர் பயன்படுத்தும் மொபைல் எண் கூட ஐந்து 1 எண்களாக உள்ளது.

RJ 45 CG 0001

RJ 45 CG 0001

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தினை நடத்தும் ரஹ்லுல் செவ்வாய்க்கிழமை தனது புதிய ஆடம்பர காருக்கு RJ 45 CG 0001 என்ற எண்ணைப் பெற 16 லட்சம் செலவு செய்து ஏலத்தில் எடுத்துள்ளார். பிரீமியம் வாகன எண்களுக்கு அதிக விலை போனது இதுவே முதன் முறை என்றும் வாகன போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜாகுவார் கார்

ஜாகுவார் கார்

மார்ச் மாதம் 25-ம் தேதி 1.5 கோடி ரூபாய் மதிப்பில் தான் வாங்கிய ஜாகுவார் காருக்காக ஒன்றை மாதம் காத்திருந்து 0001 என்ற இந்த எண்ணை இவர் வாங்கியுள்ளார்.

RJ 14 CP 0001

RJ 14 CP 0001

2011-ம் ஆண்டு முதன் முறையாக ரஹ்லுல் தனேஜா பிஎம்டபள்யூ 5 சீரிஸ் காரினை வாங்கிய போது அதற்கு RJ 14 CP 0001 என்ற எண்ணை 10.31 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

RJ 20 CB 0001

RJ 20 CB 0001

இரண்டாவதாக வாங்கிய ஸ்கோடா லவுரா காருக்கும் RJ 20 CB 0001 என்ற எண்ணை வாங்கியுள்ளார். பின்னர்ப் பிஎம்டபள்யூ 5 சீரிஸ் காரை விற்ற போது வாகன எண்ணை மட்டும் அப்படியே தக்கவைத்துக்கொண்டு புதிதாகப் பிஎம்டபள்யூ 7 சீரிஸ் கார் வாங்கி அதற்குப் பயன்படுத்தினார்.

 முதல் பைக்

முதல் பைக்

ஒன்றாம் நம்பர் மீது இவருக்கு உள்ள ஆர்வம் முதன் முறையாகப் பைக் வாங்கும் போது இருந்தே இவருக்கு இருந்துள்ளது. RJ 14 23M 2323 என்ற எண் கொண்ட பைக்கில் உள்ள 2+3+2+3 என்பதைக் கணக்கிட்டால் 10 வரும். அதிலும் ஒரு 1 இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

 சிறு வயது

சிறு வயது

சிறு வயது முதல் கஷ்டப்பட்டு வளர்ந்த இவர் 11 வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். டயர் பஞ்சர் கடை நடத்தி வந்த இவரது தந்தை 1984-ம் ஆண்டு மத்திய பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். அப்போது முதல் இவரது வாழ்க்கையில் கஷ்டம் துவங்க 18 வயது வரை சங்கராந்தி கயிர், பட்டம், ரக்‌ஷாபந்தன் கயிர், ஹோலி வண்ணப் பொடிகள், தீபாவளி பட்டாசு என விற்றுப் படித்துள்ளார். ஆனாலும் படிப்பில் இவர் தான் டாப்பர்.

ஆட்டோ ரிக்‌ஷா

ஆட்டோ ரிக்‌ஷா

இரவு நேரங்களில் 9 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ரிக்‌ஷா எல்லாம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காவல் துறையினரிடம் எல்லாம் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆண் அழகன்

ஆண் அழகன்

இவருக்கு 18 வயது ஆகும் போது இவரது உரவினர் ஒருவர் இவருக்கு மாடலிங் அறிமுகம் செய்ய அந்தப் போட்டியில் பட்டத்தினை வென்றும் ராஜஸ்தானின் ஆண் அழகன் பட்டத்தினை வென்றுள்ளார்.

நம்பர் 1

நம்பர் 1

இப்போது ரஹ்லுல் தனேஜா பிரீமியம் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். நான் எது செய்தாலும் அதில் நம்பர் 1-ஆக இருக்க வேண்டும் என்று தான் செய்வேன். விரைவில் தனது நிறுவனத்தினை இந்தியாவின் முதல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமாகக் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+