மன அழுத்தம் இல்லாத வேலை என்பது கிடையவே கிடையாது. அதிலும் சொந்தமாகத் தொழில் செய்பவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.
தொழிலின் முதலாளியான உங்களுக்குக் குறிப்பிட்ட பணி நேரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. 24×7 அதைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பதால் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடுவீர்கள். எனவே ஒரு தொழில்முனைவோராக, உங்கள் தொழிலில் வரும் மன அழுத்தத்தைக் கையாளும் யுக்திகளைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.
இங்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் 5 வழிகளைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் இது கண்டிப்பாக உதவும்.
1) துறை சார்ந்த செய்திகளைப் படித்தல்
உங்கள் தொழிலைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை எனில், துறை சார்ந்த செய்திகளைப் படியுங்கள். இதன் மூலம் தொழில் பற்றிய சிந்தனைகளை விலக்கி மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் இது உங்கள் அறிவு களஞ்சியத்தை வளர்க்கும் என்பதால் தற்போதைய தொழிலை புதுவிதமாக மேம்படுத்தவும், நடப்புப் பிரச்சனைகளில் இருந்து ஒரு இடைவேளை போலவும் இருக்கும். துறை சார்ந்த செய்திகளைப் படிப்பதன் மூலம் இவை மட்டுமில்லாமல் போட்டியை சமாளிக்கும் பல்வேறு யோசனைகளும் கிடைக்கும்.
2) உடற்பயிற்சிகள்
சிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கலாம். உடற்பயிற்சியை மேலும் சுவாரஸ்யமூட்டும் வகையில், பணிக்கு மிதிவண்டியில் செல்வது, மாராத்தான் போட்டிகளில் பங்கேற்பது மற்றும் மலையேற்றம் போன்ற கடின செயல்பாடுகளைக் கூடச் செய்யலாம். குழுவாகச் சேர்ந்து மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பெயிண்ட்பால் மற்றும் ரேப்பல்லிங் போன்ற வேடிக்கை விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.
3) அழைப்பில்லா நேரம் (No-Call time)
தொழிமுனைவோராக எப்போதும் தொலைப்பேசியும் கையோடும் தான் இருக்க வேண்டும். விசயம் பெரியதோ சிறியதோ வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், முதலீட்டாளர் மட்டுமில்லாமல் குடும்பத்தினர் கூட உங்களிடம் பேச வேண்டும் என நினைப்பர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் தொலைப்பேசியை விட்டுத் தள்ளியிருங்கள். இந்த நேரத்தை உங்கள் குழு அல்லது குடும்பத்துடன் செலவிடலாம் அல்லது உங்கள் தொழிலை முன்னேற்றும் யுக்திகளைப் பற்றி யோசிக்கலாம்.
4) ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு என்பது மனதை சாந்தப்படுத்தும் ஒரு வழிமுறை, இதன் மூலம் குறிக்கோளை வளர்க்கலாம் மற்றும் மூளையில் "சிந்திக்காத" இடத்தைப் பயன்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்த்தல் மற்றும் அனைத்து விதங்களிலும் சிந்தித்துத் தீர்வு காணுதல் போன்றவற்றைச் செய்ய முடியும். சமையல், ஓவியம், ஏதேனும் வடிவமைத்தல் அல்லது ஏதேனும் சேகரிக்கத் துவங்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைச் செய்யலாம். இவற்றின் மூலம் தொழில்முனைவோரின் முடிவெடுக்கும் திறன், சிந்திக்கும் திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.
5) தியானம்
பன்னெடுங்காலமாக இந்தியர்களால் மனதை சாந்தப்படுத்த பயன்படுத்தும் இந்த முறையின் மூலம் ஒவ்வொரு தொழில்முனைவோரும் எளிதில் மன அழுத்தத்தைக் கையாள முடியும். இதற்கு எவ்வித கருவிகளும் தேவைப்படாது, எங்கு வேண்டுமானாலும் எளிதாகவும் எவ்வித செலவும் இல்லாமலும் செய்யலாம். இதனைத் தொடர்ந்து செய்துவருபவரின் மனநிலை எப்போதும் அமைதியாகவும், சஞ்சலமில்லாமல், அங்குமிங்கும் தாவாமல் ஒரே நோக்கத்தில் செல்லும். மேலும் இதன் மூலம் பிரச்சனைகளைக் கையாளும் திறன், மன அழுத்தத்தைக் குறைக்கும் திறன், சுய விழிப்புணர்வு, நடப்பு நிகழ்வில் கவனம் மற்றும் நேர்மறையான சிந்தனைகள் எனப் பலபலன்கள் உள்ளன.
மன அழுத்தம்
இந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் மிகவும் எளிதாகத் தினமும் உங்கள் நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ளும் வகையில் உள்ளது. எனவே தொழில் உங்களது சமூகச் செயல்பாடுகளைப் பாதிக்காத வண்ணம் போதுமான இடைவேளை எடுத்து, தொழிலையும் சரியான பாதையில் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications