எல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.. பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணா அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பு நீக்கம் செய்தது மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியது போன்ற காரணங்களால் தான் பதஞ்சலி நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்காததற்காகக் காரணங்கள் என்று பதஞ்சலி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரான ஆச்சர்யா பாலகிருஷ்ணா சாடியுள்ளார்.

2017-2018 முடிவுற்ற நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற வருவாயே பெற்றுள்ளதாக ஆச்சர்யா பலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சாடல்

சாடல்

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது போன்றவை தான் பதஞ்சலியின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான காரணங்கள் என்றும் பாலகிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு

ஆதரவு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அறிமுகம் செய்த போது பதஞ்சலியின் விளம்பர தூதர் எனக் கூறிக்கொள்ளும் மோடி மற்றும் பாஜக ஆதரவாளரான பாபா ராம்தேவ் இதன் மூலம் 3 முதல் 5 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல் பணம் வெளிவரும் என்று பாராட்டியிருந்தார்.

இலக்கு

இலக்கு

2015-2016 நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் 5,000 கோடிக்கும் அதிகமான வருவாயினை ஈட்டிய நிலையில், 2016-2017 நிதி ஆண்டில் 10,000 கோடி ரூபாயினை எட்டியது. இதனை அடுத்து பதஞ்சலி நிறுவனம் 2017-2018 நிதி ஆண்டில் தங்களது இலக்கினை 20,000 கோடி என நிர்னைத்து அதனை எட்ட முடியாமல் முந்தைய ஆண்டு இருந்த நிலையிலேயே வருவாய் உள்ளதால் மோடியை இப்போது சாடியுள்ளனர்.

பாபா ராம் தேவ் ஒரு ஆண்டுக்கு முன்பு 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் தங்களது வருவாயினை இந்தியாவின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

 

சர்ச்சை

சர்ச்சை

பதஞ்சலி ஆச்சர்ய பாலகிருஷ்ணா ஜிஎஸ்டி போன்றவற்றைச் சாடியிருந்தாலும் அதன் தயாரிப்புகளின் தரம் குறித்து ஏற்பட்ட சர்ச்சையால் தான் இந்த விற்பனை சரிவு என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

புதிதாக ஏதுமில்லை

புதிதாக ஏதுமில்லை

வேகமாகப் பதஞ்சலி நிறுவனம் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் அதன் விநியோகச் சங்கிலியால் அதற்கேற்றவாறு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருவதாகவும், புதிதாக ஏதுமில்லை என்றும் பாபா ராம்தேவ் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஓர் அளவிற்கு மேல் இந்த நிறுவனத்தால் வளர முடியாது என்றும் கூறுகின்றனர்.

வழக்கு

வழக்கு

பதஞ்சலி நிறுவனம் பிப்ரவரி மாதம் 50 டன் மதிப்பிலான சந்தன மரங்களைக் கடத்தியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைப்பற்றியது. இந்தப் பரிமுதல் குறித்துப் பதஞ்சலி நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தினை நாடிய நிலையில் வழக்கு ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கார்ப்ரேட் நிறுவனங்களுடன் போட்டி போடும் பதஞ்சலி

கார்ப்ரேட் நிறுவனங்களுடன் போட்டி போடும் பதஞ்சலி

12,000 கோடி ரூபாய் வங்கிக் கடனில் திவாலாகிக் கிடக்கும் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான ரூச்சி சோயா தற்போது ஏலத்திற்கு வந்த நிலையில் அதனை 4,500 கோடி ரூபாய் வரை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. பதஞ்சலியினை தொடர்ந்து அதானி குழுமம், கோத்ரேஷ் அக்ரோவட், இமாமி நிறுவனங்களும் இந்த எண்ணெய் நிறுவனத்தினை வாங்க முயற்சி செய்து வருகிறன. ஆனால் பதஞ்சலி தான் இந்த நிறுவனத்தினை அதிகளவில் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது.

முதல் முறை

முதல் முறை

பதஞ்சலி நிறுவனம் ஒரு நிறுவனத்தினை இவ்வளவு மிகப் பெரிய தொகையினை கொடுத்து வாங்க முடிவு செய்திருப்பது முதல் முறையாகும். 1997ஆம் ஆண்டில் ஒரு சிறு பார்மசியின் வாயிலாகத் துவங்கிய பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகம் வெறும் 10 வருடத்தில் 10,561 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பதஞ்சலி வெற்றியின் ரகசியம் என்ன..?" data-gal-src="http:///img/600x100/2015/01/13-1421148684-baba-ramdev3434-600-jpg.jpg">
ரகசியம் என்ன..?

ரகசியம் என்ன..?

<strong>பதஞ்சலி வெற்றியின் ரகசியம் என்ன..? </strong>பதஞ்சலி வெற்றியின் ரகசியம் என்ன..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Acharya Balkrishna blames PM Modi’s demonetisation, GST for halt in Patanjali’s sales growth

Acharya Balkrishna blames PM Modi’s demonetisation, GST for halt in Patanjali’s sales growth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X