இந்திய அரசு கிரிப்டோகரன்சி டிரேடிங் சேவை மீது சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ஐ விதிக்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாக இது குறித்துத் தகவல் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
கிரிப்டோ கரன்சிகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் சேவை என்ற பெயரில் 18 சதவீதம் வரை வரியாகச் செலுத்த வேண்டி வரும்.
மத்திய நேரடி வரி வாரியம்
கிரிப்டோ கரன்சி மீது வரி விதிப்பது குறித்து மத்திய நேரடி வரி வாரியம் அறிக்கை ஒன்றைத் தயார் செய்து ஜிஎஸ்டி கவுன்சிலிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடையில்லை
இந்திய அரசு இது வரை கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்வது மற்றும் பயன்படுத்துவதை அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யவில்லை என்றாலும் சட்டத்திற்கு உட்பட்டது இல்லை என்றும் பல முறை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வங்கி நிறுவனங்கள்
இந்திய வங்கி நிறுவனங்களும் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை டிரேடிங் செய்வதற்குத் தடை விதித்துள்ளனர்.
சட்டப்பூர்வம் தான்
ஆனால் மத்திய அரசு கிரிப்டோ கரன்சி மீது வரி விதிக்கிறது என்றால் அதனைச் சட்டப்பூர்வமாக டிரேடிங் செய்ய அனுமதிக்கிறது என்பதே அர்த்தம் ஆகும்.
வருமான வரித் துறை
வருமான வரி துறையும் கிரிப்டோ கரன்சி டிரேடர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி வரி செலுத்துமாறு கேட்டுள்ளது. ஒரு வேலை எல்லாத் தரப்பில் இருந்து கிரிப்டோ கரன்சி மீது வரி விதிக்கப்பட்டால் அதன் மூலம் இந்தியர்கள் பெற்று வரும் லாபம் பெறும் அளவில் சரியும்.
ஜிஎஸ்டி
கிரிப்டோ கரன்சிகளை வாங்குவது அல்லது விற்பது, பரிவரித்தனை செய்வது, பிறருக்குப் பரிமாற்றம் செய்யும் போது எல்லாம் அது சேவையாகக் கருதபடுட்டு வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவே வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள் என்றால் ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு இந்திய பிட்காயின் முதலீட்டாளர்கள் தள்ளப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications