டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியை செய்து வரும் நிலையில் முதன் முறையாக 200 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் பங்குகளை அளிக்க முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தின் 150 வருட வரலாற்றில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவது இதுவே முதன் முறையாகும். அன்மையில் தான் டாடா குழுமம் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது ஊழியர்களுக்குப் பங்குகள் வழங்கப்படும்?
ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
அனுமதி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் விரைவில் நடக்க உள்ள நிலையில் அதில் பங்குகளை ஊழியர்களுக்கு அளிக்க முதலீட்டாளர்கள் அனுமதிகள் அளிக்க உள்ளனர்.
பயணிகள் வாகன விற்பனை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்துள்ள பயணிகள் வாகன மாடல்களில் ஜெஸ்ட், ஹெக்சா மற்றும் நெக்சான் உள்ளிட்டவை விற்பனையில் மிகப் பெரிய வெற்றியை சந்தித்துள்ளது.
வல்லுநர்கள்
டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள இந்த முடிவால் பங்குகளைப் பெரும் அதிகாரிகளுக்கு நிறுவனத்தின் வளர்ச்சியில் கூடுதல் பெருப்பு இருக்கும் என்றும், நிறுவனம் வளரும் போது அவர்கள் வருமானமும் வளரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..!
தோனி-ன்னா சும்மாவா..?


Click it and Unblock the Notifications