சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப் மூலமாக இந்தியாவில் பேமெண்ட்ஸ் சேவை வழங்குவதற்கான சோதனை முயற்சியில் வெற்றி அடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் அனைத்து வாட்ஸாப் பயனர்களுக்கும் பேமெண்ட்ஸ் சேவையினை வழங்க முடிவு செய்துள்ளது.
கூட்டணி
வாட்ஸ்ஆப் நிறுவனம் இதற்காக எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதில் விரைவில் எஸ்பிஐ வங்கியும் இணைய உள்ளது.
மூன்று நிறுவனங்கள்
நான்கு வங்கி நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட விரும்பும் வாட்ஸ்ஆப் தங்களது போட்டி நிறுவனங்களிடம் இருந்து பெரும் அழுத்தத்தால் மூன்று வங்கிகளுடன் மட்டும் இணைந்து சேவையினைத் துவங்க உள்ளது.
சோதனை சேவை
இந்திய பேமெண்ட்ஸ் சந்தையில் வாட்ஸ்ஆப் சோதனை சேவை 1 மில்லியன் பயனர்களுடன் பிப்ரவரி மாதம் துவங்கியதை அடுத்துப் பேடிஎம், கூகுள் டேஜ் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப்
இந்தியா தகவல் பரிமாற்ற செயலி சேவைகளில் வாட்ஸ்ஆப் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில் கண்டிப்பாக இது போட்டி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக்க இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பயனர்கள்
அமெரிக்காவின் 60 சதவீத மக்கள் தொகைக்கு இணையாக வாட்ஸ்ஆப் செயலியினை இந்தியாவில் 200 மில்லியன் நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேடிஎம்-ஐ விடக் கூடுதலாக 20 சதவீதத்தினர் வாட்ஸ்ஆப் செயலியில் ஆக்டிவாக உள்ளனர்.
பேமெண்ட்ஸ் சேவை
பெமெண்ட்ஸ் சேவைக் குறித்த விவரங்களைப் பெற வாட்ஸ்ஆப், பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களை மின்னஞ்சல் மூல தொடர்புகொண்ட போது பதில் ஏதும் உடனடியாக யாரும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications