70 பழங்குடி கிராமங்களை துரத்தியடிக்கும் மோடியின் புல்லட் ரயில் திட்டம்?

இந்திய மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கான பணிகளை 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பழங்குடியின மக்கள் மற்றும் அங்குள்ள சில சமூகங்கள் தங்களது நிலங்களை அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

70 பழங்குடியின கிராமங்கள்

70 பழங்குடியின கிராமங்கள்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள 70 பழங்குடியின கிராம மக்கள் மோடியின் புல்லெட் ரயில் திட்டத்திற்காகத் தங்களது நிலங்களை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் அதி விரைவு புல்லெட் ரயில்

இந்தியாவின் முதல் அதி விரைவு புல்லெட் ரயில்

இந்தியாவின் முதல் அதி விரைவு புல்லெட் ரயில் பாதை 508 கிலோ மீட்டருக்கு அமைப்பதற்காகப் பணிகள் 2019 ஜனவரி மாதம் முதல் துவங்க உள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

பால்கார் மாவட்டத்தில் அமைய உள்ள ரயில் பாதையின் அளவு?

பால்கார் மாவட்டத்தில் அமைய உள்ள ரயில் பாதையின் அளவு?

மும்பை - அகமதாபாத் இடையிலான இந்தப் புல்லெட் ரயில் திட்டத்திற்கான பாதைக்காக மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் 110 கிலோ மீட்டர் வரை நிலம் தேவைப்படுகிறது.

5 மடங்கு கூடுதல் பணம்

5 மடங்கு கூடுதல் பணம்

மகாராஷ்டிராவில் இருந்து சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் தமாதம் ஆகி வருவதாகவும் ஆனால் தங்கள் வைத்துள்ள இலக்கிற்கு முன்பு இதற்கான பணிகள் முடிந்து பாதை அமைக்கும் வேலைகள் துவங்கும் என்றும் இதற்காக நத பகுதி நிலங்களின் மதிப்பினை விடக் கூடுதலாக 5 மடங்கு பணத்தினை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது?

எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது?

புல்லெட் ரயில் திட்டத்திற்காக மட்டும் மகாராஷ்டிராவில் 1,400 ஹெக்டேர் இடம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் நிலம் கையகப்படுத்த 10,000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

 பால்கர் மாவட்ட மக்கள்

பால்கர் மாவட்ட மக்கள்

பால்கர் மாவட்டத்தில் 200 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில் அதற்கு 70 பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பழங்குடியின கிராமங்கள் இது போன்ற எந்த ஒரு வளர்வ்வியும் எங்களுக்குத் தேவையில்லை என்று வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம் புல்லெட் ரடில் திட்டத்திற்கு இங்குள்ள மக்கள் நிலம் அளிக்க மறுப்பு தெரிவிக்க அங்குள்ள அரசியல்வாதிகளின் தான் காரணம் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

23 கிராமங்கள்

23 கிராமங்கள்

மொத்தம் 73 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 50 கிராமங்கள் விரைவில் ஒப்புக்கொள்ள உள்ளனர் எனூற்ம், மீதம் உள்ள 23 கிராமங்கள் தான் சிக்கலாக உள்ளன. நிலம் அளப்பது குறித்துச் சர்வே எடுக்கச் சென்ற அதிகாரிகளை இவர்கள் தாக்கியுள்ளனர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்லெட் ரயில் பாதை

புல்லெட் ரயில் பாதை

மும்பை - அகமதாபாத் இடையில் 508 கிலோ மீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட உள்ள நிலையில் இடையில் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 349 கிலோ மீட்டர் ரயில் பாதை குஜராத்திலும், 154 கிலோ மீட்டர் பாதை மகாராஷ்டிராவில் அமைக்கப்பட உள்ளது.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 7 கிலோ மீட்டர் புற நகர் மும்பை பகுதிகளிலும், 39 கிலோ மீட்டர் தானேவிலும், 110 கிலோ மீட்டர் பால்கர் மாவட்டத்திலும் அமைக்கப்பட உள்ளது.

கடன்

கடன்

இந்திய அரசு புல்லெட் ரயில் திட்டத்திற்காக ஜப்பான் இண்டெர்னேஷ்னல் ஏஜென்சியிடம் இருந்து நிதிகளைப் பெற்று வரும் நிலையில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜப்பான் இண்டெர்னேஷ்னல் ஏஜென்சி புல்லெட் ரயில் திட்டத்திற்காக 50 ஆண்டுகளுக்கும் சேர்த்து 88,000 கோடி ரூபாய் கடனை 0.1 சதவீதம் ஆண்டு வட்டிக்கு அளிக்க உள்ளது. இந்தக் கடனிற்கான தொகையினை இந்திய பெற்ற பிறகு 15 வருடங்கள் பிறகு இந்தியா கடனை திருப்பிச் செலுத்தத் துவங்கினால் போதும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 

அடிக்கல்

அடிக்கல்

புல்லெட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லைச் சென்ற ஆண்டே நட்டு பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் பூமி பூஜை போட்டனர்.

உண்மை பின்னணி..!

உண்மை பின்னணி..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+