நாட்டு மக்களை அதிரவைத்த மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்த பின்பு பதிவு நீக்கப்பட்ட சுமார் 73,000 நிறுவனங்கள் வங்கி கணக்கில் சுமார் 24,000 கோடி ரூபாய் டெப்பாசிட் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
2.26 லட்சம் நிறுவனங்கள்
கருப்புப் பணம், முறைகேடான சொத்து ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் வகையில் கார்பரேட் விவகார துறை நீண்ட நாள் இயங்காமல் இருக்கும் சுமார் 2.26 லட்சம் நிறுவனங்களைத் தற்போது நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. இதில் இருக்கும் பல ஆயிரம் நிறுவனங்கள் முறைகேடாகப் பணத்தை வைப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
1.68 லட்சம் நிறுவனங்கள்
கார்பரேட் விவகார துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 2.26 லட்ச நிறுவனங்களில் 1.68 லட்ச நிறுவனங்கள் தங்களது நிறுவன கணக்கில் வைப்பு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24,000 கோடி ரூபாய்
இதில் அதிகப்படியான தொகையை வைப்புச் செய்யப்பட்ட 73,000 நிறுவனங்கள் சுமார் 24,000 கோடி ரூபாய் வைப்பு செய்துள்ளது. இந்த நிறுவனங்களையும் அதன் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் மத்திய அரசு தற்போது இறங்கியுள்ளது.
68 நிறுவனங்கள்
தற்போது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 24,000 நிறுவனங்களில் 68 நிறுவனங்கள் மீது விசாரணையும் மத்திய அரசு துவங்கியுள்ளது. இதில் 19 நிறுவனங்கள் மீது எஸ்எப்ஐஓ அமைப்பும், 49 நிறுவனங்கள் மீது RoC அமைப்பு விசாரணையைத் துவங்கியுள்ளது.
பணமதிப்பிழப்பு
மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடையின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்தது மட்டும் அல்லாமல் மக்கள் சுமார் 30 நாட்கள் பணத்தட்டுப்பாட்டின் காரணமாகப் பல கஷ்டங்களைச் சந்தித்தனர்.
மேலும் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்க முடியாமல் மூடப்பட்டது, இதனால் பல கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்தனர்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications