வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வங்கி சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அன்மையில் மத்திய அரசு வங்கிகளிடம் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியதால் அதற்கான வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த விளக்கத்தினை அளித்துள்ளது.
ஜிஎஸ்டி
மறைமுக வரி வாரியனமான சரக்கு மற்றும் சேவை வரிப் பிரிவு 2012-ம் ஆண்டு முதல் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்த வந்த இலவச சேவைகளுக்கு வரியினைச் செலுத்த வேண்டும் நோட்டிஸ்-ஐ மே மாதம் அனுப்பி இருந்தது.
மத்திய அரசு விளக்கம்
எந்தவொரு சார்பற்ற பெறுநருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அல்லது வேறுபட்ட நபரைத் தவிர வேறு ஒரு நபர் கருதி இல்லாமல் சப்ளையர் வழங்கிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்றும் ஆவணத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் விளக்கம் தேவை எனக் கோரிக்கை
வங்கிகள் வரி செலுத்த வேண்டும் மத்திய அரசு அனுப்பிய நோட்டிஸில் குழப்பம் உள்ள நிலையில் சேவை வரிச் சட்டத்தில் உள்ள சந்தேகங்களை ஆராய்ந்து மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
செய்திகள்
மத்திய அரசு வங்கிகளுக்கு அனுப்பிய நோட்டிஸ் படி 45,000 ரூபாய் வாரை வங்கிகளுக்குக் கூடுதல் செலவாகும் என்றும் அது மக்களிடம் தான் வசூலிக்கப்படும் செய்திகள் வெளியிடப்பட்டது.
தற்போது ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் சேவைகள்
அதே நேரம் இலவச பரிவர்த்தனை இல்லாமல் கூடுதலாகப் பரிவர்த்தனை செய்யும் போது அதற்கு விதிக்கப்படும் கட்டணங்களுக்கு வங்கிகள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதற்காக ஜிஎஸ்டி கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.
இது போன்று கிரெடிட் கார்டு பில் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால் இலவச செக் புக் சேவைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை.
குழப்பங்களுக்கான தீர்வு
அது மட்டும் இல்லாமல் வங்கி சேவையினைப் பல வகையில் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜிஎஸ்ட் கட்டணம் குறித்துப் பல சந்தேகங்கள் உள்ள நிலையில் இவற்றைப் பற்றி மத்திய அரசும் வங்கி நிர்வாகமும் தான் விளக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications