இட்லி, தோசை விலை உயர்வு.. சப்பாத்தி தப்பித்தது..!

உணவு பொருட்களுக்கு விலை விதிக்கும் பணிகளுக்கு முன்பாக ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கையை வெளியிட்டுள்ளது. புதன்கிழமை நடந்து முடிந்த நாணய கொள்கையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உணவு பொருட்களுக்கான உற்பத்தி விலையை 1.5 மடங்கு அதிகம் அளிப்பதாக விவசாயிகளுக்கு வாக்குறுதியை அளித்த நிலையில், நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது. இந்தச் சரிவை ஈடு செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வந்த நிலையில் நேற்று பல முக்கியக் காரணிகளை முன்வைத்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இதன் எதிரொலியாகவும், உணவு பொருட்களுக்கு மத்திய அரசு அறிவிக்க உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSP) சாமானிய மக்களின் தினசரி உணவின் விலையை உயர்த்த உள்ளது.

 தென் இந்தியா Vs வட இந்தியா

தென் இந்தியா Vs வட இந்தியா

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயர்வு மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதி ஆகியவற்றை வைத்து மத்திய அரசு உணவு பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைகளை விதிக்கும் பட்சத்தில் வட இந்திய உணவுகளை விடவும் தென் இந்திய உணவுகளின் விலை அதிகளவில் உயரும் எனத் தெரிகிறது.

100 புள்ளிகள்

100 புள்ளிகள்

மத்திய அரசு தற்போது அறிவிக்கப்பட உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைகள் மூலம் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெங்காயம், தேங்காய்க் கொண்டு செய்யப்டும் இட்லி, தோசை, சாம்பார், தேங்காய் சட்னி ஆகியவற்றின் விலை சுமார் 100 அடிப்படை புள்ளிகள் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

தேங்காய்

தேங்காய்

சமீபத்தில் தேங்காய் மீதான விலை அதிகளவில் உயர்ந்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்படும் புதிய விலை அளவுகள் மூலம் சட்னி பயன்படுத்தும் அனைத்து உணவுகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை

சர்க்கரை

அதேபோல் சர்க்கரை மீதான MSP விலை ஏற்கனவே மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில் டீ, காபி, கேக் போன்றவற்றின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புகள் உள்ளது.

வட இந்திய உணவுகள்

வட இந்திய உணவுகள்

தற்போதைய நிலைவரை காய்கறிகள் விலையில் பெரிய அளவிலான மாற்றம் வராது எனத் தெரிகிறது. அதேபோல் கோதுமை மற்றும் கொண்டைக் கடலை பருப்பு (சனா) விலை ஒற்றை இலக்க அளவில் அதாவது 4-6 சதவீதம் வரையில் மட்டுமே இதன் விலை உயரும் எனக் கணிப்புகள் கூறுகிறது.

இதனால் சப்பாத்தி, பராத்தா போன்ற வட இந்திய உணவுகளின் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.

 

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

அதேபோல் வட இந்திய உணவுகளுக்கு முக்கியத் தேவையாக இருக்கும் வெங்காயம், உருளை கிழங்கு, முட்டை ஆகியவை உற்பத்தி மற்றும் பருவ நிலைக்கு ஏற்றார் போல் அதன் விலை மாறுபடும் நிலையில் சந்தை விலைக்கு ஏற்றார் விலை மாறுபடும். ஆனாலும் தென் இந்திய உணவு விலை அளவுகளுக்கு நிகராக உயராது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+