பெங்களூரு: கருப்புப் பணம், வரி ஏய்ப்புக் குறித்துத் தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாக வருமான வரித் துறை அறிவித்து இருந்தது. இதற்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பரிசு என்று இருந்த நிலையில் தற்போது தொலைப்பேசி அழைப்பு, கொரியர்கள் மற்றும் மின்னஞ்சல் வந்து குவிகின்றனவாம்.
குவியும் புகார்கள்
பரிசு தொகையினை 5 கோடி ரூபாய் ஆக அறிவித்த பிறகு ஜூன் 1ம் தேதி முதல் வருமான வரித் துறை கமிஷ்னர்கள் முதல் அனைவருக்கும் புகார்கள் வந்து குவிய துவங்கியுள்ளது.
பரிசு தொகை
இந்தியாவில் கருப்புப் பணம் வைத்து இருப்பவர்கள் குறித்த விவரங்களை அளித்தால் 5 கோடி ரூபாய் வரையிலும், முறைகேடாக வெளிநாட்டுச் சொத்துக்களை வைத்து இருப்பது குறித்த தகவல்களை அளிக்கும் பொது 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாகவும் வருமான வரித் துறை சென்ற வாரம் அறிவித்து இருந்தது.
ஒரு வாரத்தில் 500 அழைப்புகள்
இந்தப் பரிசு தொகை அறிவிப்பினை அடுத்து ஒரு வாரத்தில் மட்டும் 500 தொலைப்பேசி அழைப்புகள் அதற்காக வந்துள்ளதாகவும் மத்திய நேரடி வரித் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
தேவையில்லாத அழைப்புகள்
வருமான வரி துறைக்கு அதிகளவில் தேவையில்லாத அழைப்புகளும், கொரியர்களில் வரி விலக்கு உள்ள வருவாய் குறித்த விவரங்கள் எல்லாம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை
புகார்களாக வரும் மின்னஞ்சல் மற்றும் கடிதங்களை நாங்கள் ஆய்வு செய்து விசாரணை துறைக்கு அனுப்பி வருவதாகவும் அதிகாரி ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். இதில் சில புகார்கள் 500 பக்கங்களுக்கும், நீதிமன்ற வழக்கு குறித்த ஆவணங்களுடன் வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
தலைவலி
பரிசு திட்டத்திற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கும் அளித்தாலும் மிகப் பரிய தலைவலியாக உள்ளதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications