நடப்பாண்டில் உயர்ந்து கொண்டே போன கச்சா எண்ணெய் விலை, இன்றைய தேதியில் பன்னாட்டுச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 67 டாலராக இருக்கிறது. ஆனாலும் உள்நாட்டுச் சந்தையில் எகிறியடிக்கும் விலையுயர்வு வாகன ஓட்டிகளை மிரட்டி வருகிறது.
மக்களின் இந்த மோசமான நிலைக்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குச் சரியான முடிவை எட்டாததால், தீர்வு இன்னும் கைக்கு எட்டவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் லாபமளிக்க 5 கிரெடிட் கார்டுகள் உதவி செய்கிறது. இது எப்படி உங்கள் பையில் உள்ள பணத்தைச் சேமிக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.
1. எஸ்.பி.ஐ சிம்ப்ளி சேவ் அட்வாண்டேஜ் கார்டு
பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்படும் இந்தக் கார்டு, பெட்ரோல் நிலையங்களில் கூடுதலாகச் செலுத்த நேரும் 1 விழுக்காடு தொகையைச் சேமிக்க உதவுகிறது. 500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை நீங்கள் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். நீங்கள் பெட்ரோல், டீசலுக்குச் செலவிடும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஒரு ரிவார்டு பாய்ண்டை பெற்றுக்கொள்ள முடியும்
2. ஹெச்.டி.எப்.சி பாரத் கேஸ் பேங்க் கார்டு
குறைந்த பட்சமாக 400 ரூபாய் வரை பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு ஒரு விழுக்காடு கூடுதல் தொகை செலவாவதை இந்தக் கார்டு மிச்சப்படுத்தும். பரிவர்த்தனைக்குத் தகுந்த கேஷ் பேக்கும், ரிவார்டும் உண்டு. பெட்ரோல், டீசலுக்குச் செலுத்தும் தொகைக்கு 50 நாட்களுக்கு வட்டி செலுத்தவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3. ஆக்சிஸ் பேங்க் பிரிவிலேஜ் கார்டு
மாதத்துக்கு 400 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை பர்வர்த்தனை செய்து கொள்ள முடியும். இதற்காக அட்டைதாரருக்கு மாதம் 400 ரூபாய் வெகுமதியுடன், 2500 மதிப்புள்ள பிக் டிக்கெட் ஒன்றையும் வெல்வதற்கு வாய்ப்பு அளிக்கிறது. இதேபோல் தவணையிலும் சலுகை வழங்குகிறது.
4. இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம் கார்டு
சிட்டி பேங்க் இ.டி.சியில் ஸ்வைப் செய்யும் இந்தக் கார்டுகளுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எரிபொருள் பரிவர்த்தனைக்கும் 4 டர்போ பாயிண்ட் அல்லது அதற்கு நிகரான 2 புள்ளி 67 விழுக்காட்டைக் கார்டுதாரர்கள் ஈட்ட முடியும். ஒரு விழுக்காடு கூடுதல் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல், டீசல் 1 டர்போ பாயிண்டுக்கு நிகரானது ஆகும்
5. கோட்டக் ராயல் சிக்னேச்சர் கிரீடிட் கார்டு
இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படாது. இதனால் வருடத்துக்கு மூவாயிரத்து 500 ரூபாய் வரை சேமிக்க முடியும். ஒவ்வொரு 150 ரூபாய்க்கும் பரிவர்த்தனை செய்யும்போது ரிவார்டு 4 ரிவார்டு பாயிண்ட் கார்டுதாரருக்குக் கிடைக்கிறது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications