மத்திய மறைமுக வரி வாரியத்தின் சிறப்பு ஜிஎஸ்டி ரீஃபண்டு சேவையின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்கு 7,000 கோடி ரூபாயினை மத்திய அரசு அளித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரீஃபண்டு தொகை வராமல் இருந்த நிலையில் அதற்கான சிறப்பு முகாம் மூலம் பணம் திருப்பி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு இருந்து வந்த மிகப் பெரிய நிதி சிக்கல்கள் தீரும் என்று கூறப்படுகிறது.
எனவே ஜிஎஸ்டி ரீஃபண்டை ஏற்றுமதியாளர்கள் எப்படிப் பெறுவது என்று இங்குப் பார்க்கலாம்?
டிவிட்
சிறப்பு ஜிஎஸ்டி ரீஃபண்டு முகாம் மூலம் 7,000 கோடி ரூபாயினை வணிகர்கள் பெற்று இருப்பதாக மத்திய மறைமுக வரி ஆணையம் டிவிட் ஒன்றை சென்ற வாரம் வெளியிட்டுள்ளது.
எதற்காக இந்த ஜிஎஸ்டி ரீஃபண்டு சிறப்பு முகாம்?
ஏற்றுமதி செய்யும் வணிகர்கள் செலுத்திய கூடுதல் ஐஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி தொகை 14,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு வசம் தேங்கிய நிலையில் அதனைப் பெற முடியாமல் தவித்து வந்தனர். அதற்குத் தீர்வு வழங்கவே இந்த ஜிஎஸ்டி ரீஃபண்டு சிறப்பு முகாம் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மறைமுக வரி ஆணையத்தின் விதிமுறைகள்
ஜிஎஸ்டி ரீஃபண்டு பெற வேண்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது அருகில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் அல்லது சுங்க வரி அலுவலகங்கள் அல்லது துறைமுகங்கள் சென்று ரீஃபண்டு படிவத்தினைப் பூர்த்திச் செய்து அளிக்க வேண்டும்.
குறிப்பு
ஜிஎஸ்டி ரீஃபண்டு ஏற்றுமதியாளர்கள் அல்லது வணிகர்களின் பான் எண் மற்றும் ஜிஎஸ்டி எண் மூலம் வழங்கப்படுவதால் இந்த விவரங்களைத் தங்களது வர்த்தகத்தினைச் செய்யும் போது முறையாகக் குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே மொத்த தொகையினையும் பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications