பேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..?

மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் சாமானியர்கள் முதல் வர்த்தகர்கள் வரை பலரும் பல விதமான பாதிப்புகளைச் சந்தித்த நிலையில் பேடிஎம் நிறுவனம் மட்டும் அதிகமான வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற்றது.

ஆம், நாடு முழுவதும் பணத்தட்டுப்பாட்டில் இருந்த நிலையில் நாட்டின் முழுவதும் எளிமையான மின்னணு பணபரிமாற்ற முறையில் வர்த்தகச் சந்தையில் கொண்டு சேர்த்தது. இதன் வாயிலாக இந்நிறுவனம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.

புதிய பிசினஸ் திட்டம்

புதிய பிசினஸ் திட்டம்

இந்நிலையில் இந்தி வெற்றியின் அடுத்தகட்ட வளர்ச்சியாகப் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பிஓஎஶ் அதாவது பாயின்ட் ஆப் சேல்ஸ் வர்த்தகத்தில் இறங்க உள்ளதாக இந்நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வர்த்தகம்

வர்த்தகம்

இந்தியா முழுவதும் தற்போது சுமார் 31 லட்ச பிஓஎஸ் இயந்திரம் உள்ளது, மார்ச் மாதம் மட்டும் இந்தியா முழுவதும் செய்யப்பட்ட 465 மில்லியன் பரிமாற்றங்களில் சுமார் 90,300 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

பிஓஎஸ் நெட்வொர்க்

பிஓஎஸ் நெட்வொர்க்

இந்தியாவில் இந்தப் பிஓஎஸ் நெட்வொர்க் மூலம் பல ஆயிரம் கோடி வருமானத்தை ஒவ்வொரு வருடமும் வங்கிகள் பரிமாற்ற கட்டணமாகப் பெறுகிறது.

சுமார் 50 வங்கிகள் மற்றும் சிறிய பேமெண்ட் நிறுவனங்களான பிஜிலி பே, நெட் ஸ்யூட் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய பிஓஎஸ் நெட்வொர்க்-ஐ ஆட்சி செய்கிறது.

 

பேடிஎம்

பேடிஎம்

இந்தியாவில் எஸ்பிஐ 6.33 பிஓஎஸ், எச்டிஎப்சி 4.03 லட்சம் பிஓஎஸ், ஐசிஐசிஐ வங்கி 3.25 பிஓஎஸ் இயந்திரங்களை வைத்துள்ள நிலையில், தற்போது பேடிஎம் நிறுவனம் முன்னணி வங்கிகளுக்குப் போட்டியாக நாட்டின் மிகப்பெரிய பிஓஎஸ் நெட்வொர்க்-ஐ கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளைப் போலப் பேடிஎம் நிறுவனமும் ஆதிக்கம் செலுத்தும்.

 

கட்டணம்

கட்டணம்

பேடிஎம் இத்துறையில் இறங்கும் நிலையில், வங்கிகள் தற்போது வசூலிக்கும் அதிகப்படியான கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகளும் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இதன் மூலம் பிஓஎஸ் இயந்திரங்களைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+